ஏ. அ. சுப்பராஜா

இந்திய அரசியல்வாதி

ஏ. அ. சுப்பராஜா (A. A. Subbaraja) ஓர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1967 தேர்தலில் இராஜபாளையம் தொகுதியில் இருந்து சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

இராஜபாளையம் நகராட்சிக்கு நான்கு முறை நகர மன்ற தலைவராகவும் இரண்டு முறை துணை நகர மன்ற தலைவராகவும் ஏ. ஏ. சுப்பராஜா இருந்தார். 1967 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராகவும் ராஜபாளையம் நகர்மன்றத் தலைவராகவும், 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை நகர்மன்றத் துணைத்தலைவராகவும் இருந்தார். உடல்நலக் குறைவு காரணமாக தன்னுடைய 79 ஆவது வயதில் இவர் இறந்தார்.

ஏ. அ. சுப்பராஜா ஏ. ஏ. எஸ். சுசீலா தம்பதியருக்கு ஏ. ஏ. எஸ். சியாம் ராஜா, சுப்பராஜா, எஸ்.ஜே சுமதி, சுமித்திரா என்ற குழந்தைகள் இருந்தனர்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. பார்க்கப்பட்ட நாள் 21 November 2009.
  2. "முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.ஏ.சுப்பராஜா காலமானார்.". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2014/dec/03/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.%E0%AE%8F%C2%A0-%E0%AE%8F.%E0%AE%8F.%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0-1023568.html. பார்த்த நாள்: 15 July 2022. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._அ._சுப்பராஜா&oldid=3631035" இலிருந்து மீள்விக்கப்பட்டது