ஏ. ஆர். கிட்வாய்

இந்திய அரசியல்வாதி

ஏ. ஆர். கிட்வாய் (Akhlaq Ur Rehman Kidwai 1 சூலை 1920 – 24 ஆகத்து 2016) என்பவர் இந்திய அறிவியலாளர், கல்வியாளர், மற்றும் அரசியலாளர். பிகார், மேற்கு வங்கம், அரியானா போன்ற மாநிலங்களில் ஆளுநராகப் பதவி வகித்தவர். பத்ம விபூசண் விருது பெற்றவர்.

பிறப்பும் படிப்பும்

தொகு

உத்தரப் பிரதேசத்தில் பரபங்கி மாவட்டம், பரகான் என்ற சிற்றுரில் பிறந்தார். ஜாமியா இசுலாமியப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்று இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் இல்லினாய்சு பல்கலைக்கழகத்தில் முதுஅறிவியல் பட்டமும், கார்னெல் பல்கலைக் கழகத்தில் ஆய்வுப்பட்டமும் பெற்றார்.[1][2]

கல்விப் பணிகள்

தொகு

கிட்வாய் பேராசிரியராக அலிகர் முசுலீம் பல்கலைக் கழகத்தில் பணியாற்றினார். அங்கேயே வேதியல் துறைத் தலைவரா கவும், அறிவியல் துறை டீன் என்ற பொறுப்பிலும் இருந்தார். 1974 முதல் 1977 வரை யூனியன் பப்ளிக் சர்வீசு கமிசனின் தலைவராகவும் இருந்தார். 1983 முதல் 1992 வரை அலிகர் முசுலீம் பல்கலைக்கழக வேந்தராகவும் இருந்தார். சம்மு காசுமீர் வங்கியின் இயக்குநர் பதவியையும் பொறுப்பேற்றார்.

ஆளுநர் பதவிகளில்

தொகு

பிகார் மாநில ஆளுநராக 1979 முதல் 1985 வரையும் பதவி வகித்தார். இரண்டாம் முறையாக 1993 முதல் 1998 வரை பிகார் மாநில ஆளுநராக இருந்தார். 1998 முத்த 1999 வரை மேற்கு வங்கத்திலும் 2004 முதல் 2009 வரை அரியானாவிலும் ஆளுநர் பதவியில் பணியாற்றினார். இராசஸ்தான் மாநிலத்தில் சில மாதங்கள் 2007 சூன் முதல் செப்டம்பர் வரை ஆளுநராக இருந்தார்.[3]

பிற பதவிகளும் விருதும்

தொகு

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக 2000 ஆம் ஆண்டு சனவரி முதல் 2004 சூலை வரை பதவி வகித்தார். கித்வாய் தேசிய மட்ட அளவில் பல்வேறு அமைப்புகளிலும் ஆணையங்களிலும் உறுப்பினராக இருந்தார். இவரது பொது வாழ்க்கை சேவையைக் கருதி பத்ம விபூசண் விருது 2011 ஆம் ஆண்டில் இந்திய நடுவணரசால் வழங்கப்பட்டது.

மேற்கோள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._ஆர்._கிட்வாய்&oldid=3749206" இலிருந்து மீள்விக்கப்பட்டது