ஏ. எக்ஸ். எல்

ஏ.எக்ஸ்.எல். ( A.X.L. ) என்பது 2018 ஆம் ஆண்டய அமெரிக்க அறிவியல்-புனைகதைத் திரைப்படமாகும். இதை ஆலிவர் டேலி எழுதி, இயக்கியுள்ளார். படத்தில் அலெக்ஸ் நியுஸ்டேடர், பெக்கி ஜி, தாமஸ் ஜேன், அலெக்ஸ் மெனிக்கோல், டொமினிக் ரெயின்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இது 2018 ஆகத்து 24 அன்று குளோபல் ரோட் என்டர்டெயின்மென்ட் மூலம் அமெரிக்காவில் வெளியிடப்பட உள்ளது.[1]

ஏ.எக்ஸ்.எல்.
A.X.L.
இயக்கம்ஆலிவர் டேலி
கதைஆலிவர் டேலி
இசைஇயன் ஹால்விஸ்ட்
நடிப்பு
  • அலெக்ஸ் நியுஸ்டேடர்
  • பெக்கி ஜி
  • அலெக்ஸ் மெனிக்கோல்
  • தாமஸ் ஜேன்
  • லூ டெய்லர் புக்கி
  • பாட்ரிசியா டி லியோன்
ஒளிப்பதிவுடிம் ஆர்
படத்தொகுப்புஜெஃப் மெக்வேய்

கதைச்சுருக்கம்

தொகு

அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு போர்க் களத்தில் உதவும் வகையில் செயற்கை நுண்ணறிவு கொண்ட இயந்திர நாய் ஒன்று இரகசியமாக வடிவமைக்கப்படுகிறது. நன்றியும் வீரமும் கொண்ட வேட்டை நாய்களுக்கு உள்ள குணங்களோடும், செயற்கை நுண்ணறிவுடனும் வடிவமைக்கப்பட்ட ஏ.எக்ஸ்.எல் எனும் பெயரிடப்பட்ட இயந்திர நாய், ஏதோ ஒரு காரணத்தால் பழுதான எந்திரக் கழிவுகளுடன் வெளியேறுகிறது. இந்திலையில் மைல்ஸ் என்ற இளைஞனால் அது மீட்கப்படுகிறது. அது உருவில் எந்திரனாக இருந்தபோதும் நாயிக்குரிய விசுவாசம் மாறாதது மைல்ஸின் விவரங்களைப் பதிவுசெய்துகொண்டு அவனையே தனது எஜமானனாக ஏற்றுக் கொள்கிறது. இதற்கிடையே அதை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள் சிலர் அதைத் தொலைவிலிருந்தபடியே கட்டுப்படுத்த முயன்றும், தீய பரிசோதனைகளிலும் ஈடுபடுகின்றனர். இவற்றுக்கு எதிராக இயந்திர நாயான ஏ.எக்ஸ்.எல். மற்றும் அது தன் எஜமானனாக ஏற்றுக்கொண்ட மைல்ஸ் மற்றும் அவனுடைய தோழி ஆகியோர் ஈடுபடும் சாகசங்களே இத்திரைப்படம்.

நடிகர்கள்

தொகு
  • அலெக்ஸ் நியுஸ்டேடர் - மைல்ஸ் ஹில்
  • பெக்கி ஜி  - சாரா ரெய்ஸ்
  • அலெக்ஸ் மெனிக்கோல் - சாம் ஃபோண்டெயின்
  • டொமினிக் ரெயின்ஸ் - ஆண்ட்ரிக்
  • தாமஸ் ஜேன் - சக் ஹில்
  • லூ டெய்லர் புக்கி - ராண்டால்
  • பாட்ரிசியா டி லியோன் - ஜோனானா ரேஸ்

தயாரிப்பு

தொகு

ஏ.எக்ஸ்.எல். படமானது புரூப் ஆப் கான்சப்ட் என்ற தனது குறும்படத்தை அடிப்படையாகக் கொண்டே, ஆலிவர் டேலி எழுதி, இயக்கிய படமாகும். அந்தக் குறும் படமானது, 2014 இல் 190 பேரின் நிதியுதவியுடன் எடுக்கப்பட்டது. அக்குறும்படம்  மனித குலத்திற்கும் தொழில்நுட்பத்திற்கும் இடையிலான எல்லைகள் மங்கலாக்குவது பற்றிய ஒரு படம் ஆகும்.[2]

இயக்குநரும் எழுத்தாளருமான ஆலிவர் டேலி தனது குறும்படத்தை முழுநீளத் திரைப்படமாக ஆக்குவதற்கான பணிகளைத் துவக்கினார். அப்போது இத்திரைப்பட திட்டத்தில் தயாரிப்பாளராக டேவிட் எஸ். கோயர், கெவின் துரனுடன் இணைந்து அவரது  பாண்டம் ஃபோர் பேனர் தயாரிப்பு நிறுவனத்தின் வழியாக  தயாரிப்பாளராக இணைந்தார்.[3]  பாண்டம் ஃபோர் பேனர் தயாரிப்பு நிறுவனத்துடன் லாக்ஷோர் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து, 2016 ஆம் ஆண்டு முதன்மைப் படப்பிடிப்பைத் துவக்கியது.[4] லாக்ஷோர் எண்டர்டெயின்மெண்ட்டுடன் குளோபல் ரோட் எண்டர்டெயின்மெண்ட் (முன்னர் ஓபன் ரோட்) சேர்ந்து இத் திரைப்பட திட்டத்தில் இணை தயாரிப்பிலும், இணை நிதி முதலீட்டிலும் ஈடுபட்டது.[5]

2016 ஆகத்தில் பாப் நட்சத்திரமான பெக்கி ஜி டுவிட்டர் மூலமாக  நடிகர் சேரவுடன் சேர்ந்து நடிப்பதாக அறிவித்தார்.[6] நடிகர் அலெக்ஸ் மெக்னிகோல் 2016 அக்டோபரில் இத்திரைப்படத்தில் அலெக்ஸ் நெஸ்டாடெடருடன் இணைந்தார்.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. Daly, Oliver (2018-08-24), A-X-L, Becky G, Alex Neustaedter, Eric Etebari, பார்க்கப்பட்ட நாள் 2018-05-18
  2. "MILES". Kickstarter (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-05-18.
  3. Jr, Mike Fleming (2015-02-04). "David Goyer Tapped To Produce Feature Version Of Oliver Daly Short ‘Miles’" (in en-US). Deadline. http://deadline.com/2015/02/david-goyer-oliver-daly-miles-1201366286/. பார்த்த நாள்: 2018-05-18. 
  4. Jaafar, Ali (2015-11-03). "Lakeshore Entertainment Partnering With David S. Goyer’s Phantom Four To Produce Oliver Daly’s ‘Miles’" (in en-US). Deadline. http://deadline.com/2015/11/lakeshore-david-s-goyer-oliver-daly-miles-1201605050/. பார்த்த நாள்: 2018-05-18. 
  5. "Motocross Film 'Miles' Lands U.S. Home With Open Road" (in en). The Hollywood Reporter. https://www.hollywoodreporter.com/news/motocross-film-miles-lands-us-888504. பார்த்த நாள்: 2018-05-18. 
  6. "Becky G. on Twitter" (in en). Twitter. https://twitter.com/iambeckyg/status/770716654967717888. பார்த்த நாள்: 2018-05-18. 
  7. N'Duka, Amanda (2016-10-25). "‘Transparent’s Alex MacNicoll Joins Oliver Daly’s Pic ‘Miles’" (in en-US). Deadline. http://deadline.com/2016/10/transparents-alex-macnicoll-miles-oliver-daly-movie-1201842531/. பார்த்த நாள்: 2018-05-18. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._எக்ஸ்._எல்&oldid=2703703" இலிருந்து மீள்விக்கப்பட்டது