ஏ. எல். எம். அதாவுல்லா
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஏ. எல். எம். அதாவுல்லா (A. L. M. Athaullah, பிறப்பு: அக்டோபர் 6, 1957), ஒரு இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில்,(சுதந்திர இலங்கையின் 14 ஆவது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் திகாமடுல்லை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சராகவும் உள்ளார். சுதந்திர இலங்கையின் 11ஆவது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12ஆவது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 ஆவது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
ஏ. எல். எம். அதாவுல்லா | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் திகாமடுல்லை மாவட்டம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அக்டோபர் 6, 1957 இலங்கை |
அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | பயிற்றப்பட்ட ஆசிரியர் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுகொழும்பு 05, C37, கெப்படிபொல மாவத்தையில் வசிக்கும் இவர் இசுலாம் மதத்தைச் சேர்ந்தவர். பயிற்றப்பட்ட ஆசிரியர்