அ. இல. சு. இலட்சுமணன்

(ஏ. எல். எஸ். லஷ்மணன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அ. இல சு. இலட்சுமணன் (A. L. S. Lakshmanan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தினைச் சேர்ந்தவர். இவர் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016ல் திருநெல்வேலி தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றம் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

அ. இல. சு. இலட்சுமணனின் தந்தை ஏ. எல். சுப்ரமணியன்[2] திருநெல்வேலி (சட்டமன்றத் தொகுதி)யிலிருந்து மூன்றுமுறை தமிழ்நாடு சட்டமன்றம் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்[3]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._இல._சு._இலட்சுமணன்&oldid=3692281" இலிருந்து மீள்விக்கப்பட்டது