ஏ.ஏ. ஜின்னா (A.A. Jinnah) (16 பிப்ரவரி 1941) இந்திய அரசியல்வாதி ஆவார். திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக இவர் 2008 ஆண்டு மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிறப்பும் குடும்பமும்

தொகு

16 பிப்ரவரி 1941 ஆம் ஆண்டு முஹம்மது சுலைமான் - கதீஜா பீவி தம்பதியருக்கு மகனாக திருவாரூரில் பிறந்தார். திருமதி சுபைதா பேகம் என்பவரை 1969 ஆம் ஆண்டு மணந்தார், இவருக்கு மூன்று பெண் குழந்தைகளும், ஒரு மகன் மற்றும் மூன்று மகள்களும் உள்ளனர்.[1]

கல்வி

தொகு

சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ பட்டம் பெற்ற இவர், சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றார்.

மாநிலங்களவை உறுப்பினர்

தொகு

03/04/2008 முதல் 02/04/2014 வரை திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டார்.

வகித்த பொறுப்புகள்

தொகு
  • 1967 - 70 சட்ட ஆலோசகர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்
  • 1996 - 1998 சென்னை துறைமுகம் அறங்காவலர்
  • திராவிட முன்னேற்றக் கழக வழக்கறிஞராக பத்து ஆண்டுகள்
  • 2004-2006 தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டுக் கழகம் உறுப்பினர்.
  • தொலைபேசி ஆலோசனைக் குழு உறுப்பினர்
  • தணிக்கை வாரியம், இந்திய அரசு
  • 2009 முதல் இரசாயனங்கள் மற்றும் உரங்களுக்கான குழு உறுப்பினர்
  • ஆகஸ்ட் 2008 - மே 2009 உறுப்பினர், வெளிவிவகார அமைச்சின் ஆலோசனைக் குழு
  • டிசம்பர் 2008 முதல் உறுப்பினர் தேங்காய் மேம்பாட்டு வாரியம்
  • நவம்பர் 2010 முதல் உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் குழு உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்ட உறுப்பினர்
  • பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்திற்கான ஆலோசனைக் குழு
  • ஆகஸ்ட் 2012 முதல் இரசாயனங்கள் மற்றும் உரங்கள் பற்றிய குழு உறுப்பினர்.

மிசா

தொகு

1976 ஆம் ஆண்டு மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டு சிறை தண்டனை பெற்றவர்.

வெளி இணைப்புகள்

தொகு
  1. மாநிலங்களவை உறுப்பினர் விபரம் [தொடர்பிழந்த இணைப்பு]
  2. "- மாநிலங்களவை உறுப்பினர் விபரம்". Archived from the original on 2020-06-05. பார்க்கப்பட்ட நாள் 2020-06-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._ஏ._ஜின்னா&oldid=3943308" இலிருந்து மீள்விக்கப்பட்டது