ஏ. ஜி. எஸ். இராம்பாபு

இந்திய அரசியல்வாதி

ஏ. ஜி. எஸ். இராம்பாபு (A. G. S. Ram Babu; 27 சூலை 1962 - 11 சனவரி 2022), முன்னாள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியல்வாதியும் ஆவார். வழக்கறிஞரும், சமூகப் பணியாளருமான இவர் மதுரை மக்களவைத் தொகுதியின் மறைந்த முன்னாள் எட்டாவது மக்களவை உறுப்பினர் ஏ. ஜி. சுப்புராமனின் மகனாவார்.

அரசியல்

தொகு

ஏ. ஜி. எஸ். இராம்பாபு, மூன்று முறை மதுரை மக்களவைத் தொகுதியிலிருந்து 9, 10 மற்றும் 11ஆவது இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். [1] முதன் முறையாக 1989இல் இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாக மதுரை மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாம் முறையாக 1991இல் தமிழ் மாநில காங்கிரசு கட்சி சார்பாக போட்டியிட்டு இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்றாம் முறையாக மீண்டும் 1996இல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு, வென்று மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினரானர்.[2][3][4]

மறைவு

தொகு

கொரானா பெருந்தொற்று காரண்மாக தமது 60-வது அகவையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 2022 சனவரி 11 அன்று மறைந்தார்.[5][6]

மேற்கோள்கள்

தொகு
  1. Rambabu, A. Govindarajalu Subbaraman Madurai (Tamil Nadu) 09, 10, 11
  2. "Volume I, 1989 Indian general election, 9th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2016-09-12.
  3. "Volume I, 1991 Indian general election, 10th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2016-09-12.
  4. "Volume I, 1996 Indian Lok Sabha election, 11th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2016-09-12.
  5. Former MP Ram Babu dies
  6. மதுரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஜி.எஸ் ராம்பாபு காலமானார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._ஜி._எஸ்._இராம்பாபு&oldid=3943323" இலிருந்து மீள்விக்கப்பட்டது