ஏ. டபிள்யூ. ரபி பெர்னார்ட்

இந்திய அரசியல்வாதி

ஏ. டபிள்யூ. ரபி பெர்னார்ட் (A. W. Rabi Bernard) இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டிலிருந்து இந்திய நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரும் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் சார்பாக மாநிலங்கலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.[1] இவர் சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி ஆகியவற்றில் பணிபுரிந்துள்ளார். அப்போது பல சர்வதேச மற்றும் தேசிய தலைவர்கள், வணிகத் தலைவர்களிடம் நேருக்கு நேர் என்ற பெயரிலான நிகழ்ச்சிக்கு நேர்காணல் நடத்தி இருக்கிறார். மேலும் இவர் சென்னை லயோலா கல்லூரியில் காட்சி ஊடகத் துறையில் பேராசிரியாக பணிபுரிந்துள்ளார்.[2]

ஆரோக்கியசாமி வில்லியம் ரபி பெர்னார்ட்
Arokiaswamy William Rabi Bernard
மாநிலங்களவை உறுப்பினர் தமிழ்நாடு
பதவியில்
19 சூலை 2011 – 29 சூன் 2016
பின்னவர்எசு.ஆர். பாலசுப்பிரம்ணியன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 பெப்ரவரி 1959 (1959-02-03) (அகவை 65)
கோனேரிப்பட்டி, சேலம் மாவட்டம், தமிழ்நாடு
அரசியல் கட்சிஅ.இ.அ.தி.மு.க.
துணைவர்டி. பெர்னத் பிரமீளா
பிள்ளைகள்3 மகள்கள்

கல்வி

தொகு

இளங்கலைப் பட்டம் (இதழியில் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல்), முதுகலை (தகவல் தொடர்பியல்) படிப்புகளை பிலிப்பைன்ஸின் சாண்டோ டோமசு பல்கலைக்கழகத்தில் பயின்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. MPs from Tamil Nadu பரணிடப்பட்டது 20 செப்டெம்பர் 2012 at the வந்தவழி இயந்திரம்
  2. "Rabi Bernard, AIADMK nominee for Rajya Sabha". The Hindu. 29 June 2011. பார்க்கப்பட்ட நாள் 25 July 2013.