ஏ. நடராஜன் (1938 - 13 பிப்ரவரி 2016) தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார். இவர் ஒரு நாவலாசிரியர். மேலும் கருநாடக இசை சார்ந்த சென்னையின் இசை அமைப்புகளில் முக்கியப் பொறுப்பாளராக இருந்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

முசிறிக்கு அருகிலுள்ள திருவேங்கிமலை எனும் ஊரில் இசைக் குடும்பமொன்றில் 1938ஆம் ஆண்டில் பிறந்தார்[1]. இவரின் தந்தை ஆறுமுகம் நாதசுவர இசைக் கலைஞராவார். நடராஜனின் மாமனார் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் ஆவார்.

1963ஆம் ஆண்டு திருச்சி அனைத்திந்திய வானொலி நிலைய இயக்குநராகப் பணிக்கு சேர்ந்தார். பின்னர் கோவை வானொலி நிலைய இயக்குநராக இருந்தார். சென்னை தூர்தர்சனில் 1988 ஆம் ஆண்டில் சேர்ந்து 10 ஆண்டுகள் பணியாற்றினார்.[1]

பெற்ற சிறப்புகள்

தொகு

மயிலுக்கு ஒரு கூண்டு, மோக வில் எனும் இவரின் நூல்கள் தமிழக அரசின் விருதுகளைப் பெற்றன[1].

மறைவு

தொகு

நடராஜன் 13 பிப்ரவரி 2016 அன்று சென்னையில் காலமானார்[2].

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Former DD Director Natarajan dead". தி இந்து (ஆங்கிலம்). http://www.thehindu.com/news/cities/chennai/former-dd-director-natarajan-dead/article8235437.ece?ref=tpnews. பார்த்த நாள்: பிப்ரவரி 14, 2016. 
  2. "சென்னை தொலைக்காட்சி நிலைய முன்னாள் இயக்குநர் ஏ.நடராஜன் காலமானார்: கருணாநிதி இரங்கல்". தி இந்து (தமிழ்). 14 பிப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 14 பிப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._நடராஜன்&oldid=3081380" இலிருந்து மீள்விக்கப்பட்டது