ஏ. பி. சந்தானராஜ்

ஏ. பி. சந்தானராஜ் என்பவர் தமிழக ஓவியர்களுள் ஒருவராவார்.[1] ஆன்ட்ரூஸ் பீட்டர் சந்தானராஜ் என்பது முழு பெயர். கும்பகோணம் கவின்கலை கல்லூரி, சென்னை கவின்கலை கல்லூரி ஆகியவற்றில் முதல்வராக பணிசெய்துள்ளார். நவீன ஓவியங்களை வரைவதில் வல்லுநரான இவருக்கு தமிழக அரசு 1995 இல் கலைமாமணி விருது தந்துள்ளது.

ஏ. பி. சந்தானராஜ்
சந்தானராஜ் அவர்களை குறிக்கும் ஓவியம்
தேசியம்இந்தியன்
அறியப்படுவதுஓவியம்
விருதுகள்கலா ரத்னா, கலைமாமணி,

வாழ்க்கை வரலாறு

தொகு

சந்தானராஜ் 1932 இல் திருவண்ணாமலையில் பிறந்தார். 1953 இல் சென்னை கவின்கலை கல்லூரியில் படித்து இளங்கலை பட்டம் பெற்றார்.1955 இல் முதுகலை பட்டம் பெற்றார். 1958 ஆம் ஆண்டு முதல் 1978 வரை சென்னை கவின் கலை கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1978 இல் கும்பகோணம் கவின் கலைக்கல்லூரியில் முதல்வராக பணியாற்றினார். 1985 முதல் 1990 வரை சென்னை கவின்கலை கல்லூரியில் முதல்வராதப் பணியாற்றினார்.‌

ஆதிமூலம், ஆர். பி. பாஸ்கரன், சி. டக்ளஸ், ஆர். எம். பழனியப்பன் ஆகியோர் சந்தானராஜின் சீடர்கள். 24 மே 2009 அன்று சந்தானராஜ் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இறந்தார்.‌

கண்காட்சிகள்

தொகு
  • தெற்கு கண்காட்சி, வின்யாசா கலைக்கூடம், சென்னை, டெல்லி & பெங்களூர் (2006);
  • தி ஆர்ட் வித், கஸ்தூரி சீனிவாசன் ஆர்ட் கேலரி, கோயம்புத்தூர் (2005);
  • பின்னோக்கி கண்காட்சி, சிஎம்சி கலைக்கூடம் (1990); புது தில்லி (1988)
  • லலித் கலா அகாடமி ஏற்பாடு செய்த பிரேசில் முத்தரப்பு ஆணையராக நியமிக்கப்பட்டார்;
  • காமன்வெல்த் கலை கண்காட்சி, லண்டன் (1967);
  • மூன்று இந்திய ஓவியர்கள், பிரித்தானிய கவுன்சில், மெட்ராஸ் (1966)

விருதுகள்

தொகு
  • கலா ரத்னா விருது, ஏஐஎப்ஏசிஎஸ், புது தில்லி (1997);
  • கலைமாமணி விருது, தமிழக அரசு, மெட்ராஸ் (1995);
  • கலாய் சம்மல் விருது, தமிழ்நாடு (1983);
  • கேரள மாநில விருது (1978);
  • மூத்த கலைஞர் விருது, ஏஐஎப்ஏசிஎஸ், புது தில்லி (1962);
  • தங்கப் பதக்கம், இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி, கல்கத்தா (1958);
  • தேசிய விருது, லலித் கலா அகாடமி, புது தில்லி (1957 & 1962);
  • முதுகலை படிப்புக்கான இந்திய அரசு உதவித்தொகை (1954-6);
  • தங்கப் பதக்கம், அரசு கலை மற்றும் கைவினைக் கல்லூரி, மெட்ராஸ் (1953)

இவற்றையும் காண்க

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. சந்தானராஜின் ஓவியங்கள்: மண்ணில் வேர்விடும் கலை - பிரேமா ரேவதி - இந்து தமிழ்திசை 22 பிப்ரவரி 2014

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._பி._சந்தானராஜ்&oldid=3924744" இலிருந்து மீள்விக்கப்பட்டது