ஐஎன்எஸ்வி தாரிணி
ஐஎன்எஸ்வி தாரிணி (INSV Tarini) இந்தியக் கடற்படையின் இரண்டாவது பாய்மரப் படகு ஆகும்.[1] இது கோவாவில் அமைந்துள்ள அக்வாரிசு கப்பல் கட்டுமானத்தில் கட்டப்பட்டது. விரிவான கடல் சோதனைகளுக்குப் பிறகு, இது பிப்ரவரி 18, 2017 அன்று இந்திய கடற்படைச் சேவைக்கு வழங்கப்பட்டது.
வடிவமைப்பு மற்றும் விளக்கம்
தொகுஐஎன்எஸ்வி தாரிணி என்பது கோவாவில் உள்ள திவாரில் உள்ள அக்வாரிசு கப்பல் கட்டுமானத்தில் உருவாக்கப்பட்ட ஒரு உல்லாச சுலூப் ஆகும்.[1][2][3] இந்தக் கப்பல் தாரா தாரிணி கோயிலின் நினைவாக ஐஎன்எஸ்வி தாரிணி எனப் பெயரிடப்பட்டு 18 பிப்ரவரி 2017 அன்று இந்தியக் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.[1][2][3][4] இதன் வெளிச்சுவரானது மரக்கட்டை மற்றும் கண்ணாடியிழை இடையீட்டால் கட்டப்பட்டுள்ளது.[1][3] படகில் முக்கிய பாய், ஜெனோவா, தாங்கு, கீழ்க்காற்று மற்றும் புயல் பாய்மரம் உட்பட ஆறு பாய்மரங்கள் உள்ளன. இது தீவிரமான சூழ்நிலைகளிலும் பயணம் செய்யும் திறன் கொண்டது.[1][3] படகு 56 அடி நீளம் கொண்டது.[5] மார் 25 மீட்டர் உயரம் கொண்டது.[1][3]
நாவிகா சாகர் பரிக்ரமா
தொகுநவிகா சாகர் பரிக்ரமா என்பது இந்திய கடற்படையின் பெண் கடற்படை அதிகாரிகளால் INSV தாரிணியில் உலகை சுற்றி வருவதற்கான பயணத்தின் பெயராகும். துணைநிலை கட்டளையாளர் வர்த்திகா கோசி தலைமையில் துணைநிலை கட்டளையாளர் வர்த்திகா கோஷி, துணைநிலை கட்டளையாளர் பிரதீபா ஜம்வால், துணைநிலை கட்டளையாளர் சுவாதி பி, துணைநிலை ஐஸ்வர்யா போத்தபதி, துணைநிலை எஸ் விஜயா தேவி மற்றும் துணைநிலை பயல் குப்தா ஆகிய 6 பேர் கொண்ட பெண்கள் குழு இந்தப் பயணட்தில் ஈடுபட்டனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Tarini to be Inducted into Indian Navy on 18 February 17". செய்திக் குறிப்பு.
- ↑ 2.0 2.1 "INSV Tarini Inducted – All Woman Crew Scheduled to Sail her around the Globe Commencing August 2017". செய்திக் குறிப்பு.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 "Second ocean-going sailboat INSV Tarini to be inducted into Indian Navy on Saturday". The Financial Express. 18 February 2017. http://www.financialexpress.com/india-news/second-ocean-going-sailboat-insv-tarini-to-be-inducted-into-indian-navy-on-saturday/556053/.
- ↑ "Navy honours Tara-Tarini hill shrine by naming sailboat". தி இந்து. 20 February 2017. http://www.thehindu.com/news/national/other-states/Navy-honours-Tara-Tarini-hill-shrine-by-naming-sailboat/article17331284.ece.
- ↑ "All-woman team returns after sailing around world". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 31 January 2017. https://timesofindia.indiatimes.com/india/all-woman-team-returns-after-sailing-around-world/articleshow/64228929.cms.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் INSV Tarini தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.