சுலூப்
’’’சுலூப்’’’ (sloop) என்பது, முன் – பின் பாயமைப்புடன் கூடிய ஒற்றைப் பாய்மரம் கொண்ட பாய்க்கப்பல். சுலூப்புக்கள் ஒரேயொரு தலைப்பாயை மட்டுமே கொண்டிருக்கும்.[1] இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தலைப்பாய்கள் இருந்தால் அக்கப்பல் “கட்டர்” என அழைக்கப்படும். இவ்வாறான கப்பல்களில் பாய்மரம் சுலூப்புகளில் இருப்பதிலும் பின்னோக்கித் தள்ளியிருக்கும். முரணாக, ஐக்கிய அமெரிக்காவில், ஒரு சுலூப்புக்கு ஒன்று, இரண்டு அல்லது மூன்று தலைப்பாய்கள் பாய்மரத்துக்கு முன்புறம் இருக்கக்கூடும். அங்கு பாய்க்கப்பல்களுக்கு “கட்டர்” என்னும் பெயர் பொதுவாகப் பயன்படுவதில்லை.
நவீன பாய்க்கப்பல்களில் பொதுவாகக் காணப்படுவது பெர்முடா பாயமைப்புக் கொண்ட சுலூப் ஆகும். பொதுவாக நவீன சுலூப்களில், பாய்மரத்துக்கு முன்புறம் பொருத்தப்படும் ஒற்றைத் தலைப்பாயுடன் முதன்மைப் பாய், பாய்மரத்துக்குப் பின்னால் இருக்கும் வளையில் பொருத்தப்படும்.
சுலூப்கள் பாய்மர உச்சியில் பொருத்தப்படும் பாய் அமைப்பையோ அல்லது பகுதி உயரத்தில் பொருத்தப்படும் பாய் அமைப்பயோ கொண்டிருக்கலாம். முதன்மைப் பாய் தலைப் பாயைவிடச் சிறிதாக இருக்கக்கூடும். இது செனோவா முக்கோணப்பாய் ஆகும். பகுதிப் பாயமைப்பில் பாயைத் தாங்கும் முன்வடம் பாய்மரத்தின் முக்காற் பங்கு அல்லது 7/8 பங்கு உயரத்தில் அல்லது வேறு பகுதி உயரத்தில் பொருத்தப்பட்டிருக்கும். பகுதிப் பாயமைப்புக் கொண்ட சுலூப்பின் பாய்மரம், பாய்மர உச்சிப் பாயமைப்புக் கொண்ட சுலூப்பின் பாய்மரத்தைவிட முன்னோக்கி அமையக்கூடும்.
மேற்கோள்கள்
தொகுஇவற்றையும் பார்க்கவும்
தொகுவெளியிணைப்புக்கள்
தொகு- Hudson River Sloop Woody Guthrie, a smaller Hudson River Ferry sloop operated by the Beacon Sloop Club
- Jones, Gregory O. The American Sailboat.