ஐஎன்எஸ் விந்தியகிரி (2023)

ஐஎன்எஸ் விந்தியகிரி இந்தியக் கடற்படையின் போர்க் கப்பல் ஆகும். இது கொல்கத்தாவில் உள்ள இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான கார்டன் ரீச் கப்பல்கட்டுநர்கள் & பொறியாளர்கள் (GRSE) நிறுவனத்தால் கட்டப்பட்டு, 17 ஆகஸ்டு 2023 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களால் இந்தியக் கடற்படைக்கு அர்ப்பணிக்கப்பட்டது.[3]

ஐஎன்எஸ் விந்தியகிரி, போர்க் கப்பல்
கப்பல் (இந்தியா) போர்க் கப்பல்
பெயர்: ஐஎன்எஸ் விந்தியகிரி [1]
நினைவாகப் பெயரிடப்பட்டது: விந்தியமலை
உரிமையாளர்: இந்தியக் கடற்படை
கட்டியோர்: கார்டன் ரீச் கப்பல்கட்டுநர்கள் & பொறியாளர்கள் (GRSE)[2]
துறையெண்: 3024
துவக்கம்: 5 மார்ச் 2021
வெளியீடு: 17 ஆகஸ்டு 2023
நிலை: கடற்படைக்கு அர்ப்பணிக்கப்பட்டது
பொது இயல்புகள்
வகுப்பும் வகையும்:போர்க் கப்பல்
பெயர்வு:> 6670 டன்கள்
நீளம்:149 மீட்டர்
உந்தல்:டீசல் அல்லது எரிவாயு உந்து அமைப்புகள்
விரைவு:28 கடல் மைல்
குறிப்புகள்:நீர், நிலம் & வான் பரப்புகளை பாதுகாத்தல்.

இக்கப்பலுக்கு விந்தியமலை பெயரில் அழைக்கப்படுகிறது. இது திட்டம் 17 ஆல்பாவின் கீழ் தயாரிக்கப்பட்ட 6வது போர்க் கப்பல் ஆகும். இது நீர்மூழ்கிக் கப்பலுக்கு எதிராக போரிடக்கூடியது. இக்கப்பல் வழிகாட்டப்பட்ட ஏவுகணை போர்க் கப்பல்கள் என வகைப்படுத்தப்பட்டவை. இது 149 மீட்டர் நீளம் மற்றும் சுமார் 6,670 டன்கள் எடை கொண்டவை. இது மணிக்கு 28 கடல் மைல் வேகத்தில் செல்லக்கூடியவை. இக்கப்பல் வான், நிலம் மற்றும் கடல் மேற்பரப்பு களங்களில் கண்டறியப்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முடியும். இக்கப்பலின் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் அமைப்புகளில் 75% நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) உள்ளிட்ட உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டது. [4][5]

ஐஎன்எஸ் விந்தியகிரி போர்க் கப்பலின் வரைகலை

மேற்கோள்கள்

தொகு
  1. Press Release (17 August 2023). ""Mother of All Warship Launches"- Hon'ble President of India launches advanced Frigate INS Vindhyagiri at GRSE". Garden Reach Shipbuilders and Engineers. பார்க்கப்பட்ட நாள் 18 August 2023.
  2. Garden Reach Shipbuilders & Engineers
  3. ஐஎன்எஸ் விந்தியகிரி ஏவப்பட்டது
  4. "President to launch advanced stealth frigate INS Vindhyagiri today - Things you need to know" (in en). Hindustan Times. 17 August 2023. https://www.hindustantimes.com/india-news/president-to-launch-advanced-stealth-frigate-ins-vindhyagiri-today-things-you-need-to-know-101692248611503.html. 
  5. "President Murmu to launch new frigate 'INS Vindhyagiri' on Thursday". Business Standard. 14 August 2023. https://www.business-standard.com/economy/news/president-murmu-to-launch-new-frigate-ins-vindhyagiri-on-thursday-123081400520_1.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐஎன்எஸ்_விந்தியகிரி_(2023)&oldid=3785523" இலிருந்து மீள்விக்கப்பட்டது