ஐக்கியவியல்
ஐக்கியவியல் என்னும் நூல் திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மறைஞான சம்பந்தர் இயற்றிய நூல்களில் ஒன்று.
காலம் 16ஆம் நூற்றாண்டு.
இது 15 வெண்பாக்கள் மட்டும் கொண்ட ஒரு சிறு நூல்.
ஐக்கியம் என்றால் என்ன என்பதை இந்த நூல் விளக்குகிறது.
இந்த நூலிலுள்ள ஒரு பாடல்.
- தீட்டேல் இதழிலுற இந்நூலை; தீட்டிடினும்
- காட்டேல் ஊன் காயம் உவவார் கண்ணில் – காட்டிடுக
- ஆதி சம வாய விலங்கு ஆக்கை இருள் ஆணவம், அ-
- நாதி சம வாய நஞ்சு என்பார்க்கு
- ஐக்கியம் - விளக்கம்
ஐக்கியம் என்பது ஒன்றுபட்டு வாழ்தல்.
இதனைத் திருவள்ளுவர் ஒப்புரவு அறிதல் என்னும் அதிகாரத்தில் விளக்குகிறார்.
இது சமுதாயத்தில் ஒட்டுறவோடு வாழ்தல்.
சமூகத்தில் ஒட்டுறவு இல்லாதவனை இக்காலத்தில் ‘நாதி இல்லாதவன்’ என்பர்.
‘நாதி’ என்பது எனது என்னும் பொருளைத் தந்து தெலுங்கில் வழங்குவதைக் காண்கிறோம்.
ஒருவனை என்னுடையவன் எனப் பிறர் மதிப்பது ‘நாதி’.
இதுவே ஐக்கியம்.
ஐக்கியம் இல்லாதது ‘அநாதி’.
மேலே காட்டப்பட்டுள்ள பாடல் ‘அநாதி’ என்னும் சொல்லை அதன் பொருள் விளங்குமாறு, இரண்டு அடிகளில் பிரித்துக் காட்டியிருப்பது குறிப்பிடத் தக்கது.
- ஐக்கியம் - பொது விளக்கம்
- வேதாந்த, சித்தாந்த வேறுபாடு காட்டாதது. [1]
அடிக்குறிப்பு
தொகு- ↑ மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005