ஐக்கிய அமெரிக்கத் தேசிய புவிப்பகுப்பளவுசார் அளவீடு
தேசிய புவிப்பகுப்பளவுசார் அளவீடு (National Geodetic Survey) முன்னதாக ஐக்கிய அமெரிக்க கடலோரம் மற்றும் புவிபகுப்பளவுசார் அளவீடு (U.S.C.G.S.), தேசிய ஆள்கூற்று முறைமையை வரையறுத்துப் பராமரிக்கும் ஐக்கிய அமெரிக்க கூட்டரசின் முகமையாகும். இந்த அமைப்பு புவியின் மேடு பள்ளங்களை அளவிட்டு நிலப்படங்களை உருவாக்குகின்றனர். இவ்வமைப்பு காந்தப் புலங்களையும் ஓதங்களையும் அளக்கிறது. 1807இல் நிறுவப்பட்ட இது கடலோர நிலப்படங்களை வரைந்தது.[1] இந்த நிலப்படங்கள் போக்குவரத்து, தொலைத்தொடர்பு, நிலப்படவியல் போன்ற துறைகளில் பெரிதும் பயனாகின்றன. தவிரவும் இவற்றிற்கு பல அறிவியல், பொறியியல் பயன்பாடுகளும் உள்ளன. 1970 முதல் இது தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (NOAA) அங்கமாக ஐக்கிய அமெரிக்க வணிக அமைச்சின் கீழ் இயங்குகின்றது.[1]
மேற்சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "Coast and Geodetic Survey Heritage = NOAA Central Library". Archived from the original on டிசம்பர் 19, 2015. பார்க்கப்பட்ட நாள் January 13, 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)