ஐக்கிய நாடுகள் செயலகம்

ஐக்கிய நாடுகள் செயலகம் (United Nations Secretariat) ஐக்கிய நாடுகள் முறைமையின் ஐந்து அங்கங்களில் ஒன்றாகும். உலகளவில் பன்னாட்டு குடிமை ஊழியர்கள் துணையுடன் இதன் தலைமைப் பொறுப்பில் ஐநா பொதுச்செயலாளர் உள்ளார். இது ஐக்கிய நாடுகளின் பல்வேறு அமைப்புகளின் கூட்டங்களுக்கு வேண்டிய ஆய்வுகள், தகவல்கள் மற்றும் வசதிகளை ஒருங்கிணைத்துத் தருகிறது. மேலும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை மற்றும் பிற அமைப்புகள் இடுகின்ற பணிகளை நிறைவேற்றுகிறது. ஐக்கிய நாடுகள் பட்டயத்தின்படி இதில் பணி புரியும் ஊழியர்கள் "செயற்திறன், திறமை மற்றும் நேர்மையில் மிகுந்த தரமுடையவர்களையே" புவியின் பரந்தளவில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது.


ஐக்கிய நாடுகள் செயலகம்
வகைமுதன்மை அங்கம்
தலைமைஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர்
2017-நடப்பு
அந்தோணிய குத்தேரசு
{{}}
நிலைசெயற்பாட்டில்
நிறுவப்பட்டது1945
இணையதளம்www.un.org/documents/st.htm

வெளியிணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
United Nations Secretariat
என்பதின் ஊடகங்கள் உள்ளன.