ஐசக் மன்சூர்

இந்திய முன்னாள் நீச்சல் வீரர்

ஐசக் மன்சூர் (Isaac Monsoor) என்பவர் ஓர் இந்திய முன்னாள் நீச்சல் வீரர் ஆவார். இவர் 1929 ஆம் ஆண்டு மே மாதம் முப்பதாம் தேதியன்று பிறந்தார். ஐக்கிய இராச்சியத்தின் இலண்டன் நகரில் 1948 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டியின் 100 மீட்டர் கட்டற்ற முன்னோக்கு நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பாக இவர் கலந்து கொண்டார். இதே ஆண்டு இங்கு நடைபெற்ற நீர்பந்தாட்டப் போட்டி மற்றும் 1952 இல் பின்லாந்து நாட்டில் நடைபெற்ற நீர்பந்தாட்டப் போட்டி இரண்டிலும் இவர் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டார் [1].

ஐசக் மன்சூர்
Isaac Monsoor
தனிநபர் தகவல்
பிறப்பு1929 மே 30
விளையாட்டு
விளையாட்டுநீச்சல்

மேற்கோள்கள்தொகு

  1. "Isaac Monsoor Olympic Results". Sports-Reference.com. Sports Reference LLC. பார்த்த நாள் 17 September 2016.

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐசக்_மன்சூர்&oldid=2693076" இருந்து மீள்விக்கப்பட்டது