ஐசுவர்யா நிதி

அமெரிக்க நடிகை

ஐசுவர்யா நிதி (Aishveryaa Nidhi) அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய ஆத்திரேலிய நடிகையாவார். இயக்குநர், எழுத்தாளர், நாடக ஆளுமை என பன்முக கலைஞராகவும் இவர் அறியப்படுகிறார். லாசு ஏஞ்சல்சு நகரத்தில் இவர் வசிக்கிறார்.[1]

ஐசுவர்யா நிதி
Aishveryaa Nidhi
Aishveryaa Nidhi ऐश्वेर्या निधि
பிறப்புபுதுதில்லி
தேசியம்ஆத்திரேலியர்
பணிநடிகை, இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர்

சார்ட்டு+சுவீட் என்ற பெயரில் ஆத்திரேலியா மற்றும் ஆசியா முழுவதும் நாடகம், நடனம், இசை-அரங்கம், நகைச்சுவை போன்ற கலை வடிவங்களில் விழாக்களை வழங்கும் பல்வடிவ கலை தளத்தில் ஐசுவர்யா நடிக்கிறார். பாலிவுட்டு எனப்படும் இந்திய இந்திமொழி திரை உலக சார்ட்டு+சுவீட் தளத்தை தொடங்கி பணியாற்றியுள்ளார்.[2][3][4] காந்தாரி என்பது இவரது குறிப்பிடத்தக்க ஒரு படைப்பாகும். வியாசரின் இந்து காவியமான மகாபாரதத்தில் இருந்து ஒளியைத் தேடும் காந்தாரி கதாபாத்திரத்தைப் பற்றிய நாடகம் பரவலாகப் பேசப்பட்டது. சிட்னியில் உள்ள அபிநய் நிகழ்த்துக்கலை பள்ளியின் தலைவராகவும் கலை இயக்குநராகவும் ஐசுவர்யா செயல்படுகிறார்.[5][6]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

ஐசுவர்யா இந்தியாவின் புதுதில்லியில் பிறந்து வளர்ந்தார். தனது குடும்பத்துடன் 2001 ஆம் ஆண்டு நியூசிலாந்து நாட்டிலுள்ள ஆக்லாந்துக்கும், பின்னர் ஒரு வருடம் கழித்து சிட்னிக்கும் சென்றார்.[7] இவரது மகன் சவுரியநிதி ஒரு நடிகராகவும் தொழிலதிபராகவும் உள்ளார்.

நாடகமும் நடிப்பும்

தொகு

ஐசுவர்யா சிட்னி நாடக நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுகிறார். 2010 ஆம் ஆண்டு இந்நிறுவனத்தின் தயாரிப்பான இயான் பிரிம்மிங்காமின் இலெவியாதன் நாவலின் தழுவல் நாடகத்தில் இவர் நடித்தார். 2013 ஆம் ஆண்டு பாங்சுடவுன் கலை மையத்தில்தி அதர் வே என்ற நாடகத்திலும் ஐசுவர்யா நடித்தார்.[8] இவற்றைத் தவிர அபிநய் நிகழ்த்துக் கலை பள்ளியின் தயாரிப்பான காந்தாரி நாடகத்தில் நடித்தார். இது இந்து காவியமான மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள காந்தாரியின் கதையாகும். அரவிந்த் கவுரால் திரைக்கதை எழுதி இயக்கி அரங்கேற்றினார். 2005 ஆம் ஆண்டு சிட்னியில் உள்ள தேசிய நாடகக் கலை நிறுவனத்தில் இந்த அரங்கேற்றம் நிகழ்ந்தது.[9] பின்னர் இந்த நாடகம் தில்லி[10], குருசேத்ரா, லக்னோ, அமிர்தசரசு[11], செய்ப்பூர், சோத்பூர், மும்பை[12] சிட்னி ஃப்ரிஞ்ச் திருவிழா[13] மற்றும் ஆலிவுட் ஃப்ரிஞ்ச் திருவிழா என பல முறை அரங்கேற்றப்பட்டது.[14]

யுனெசுகோ நடத்திய பன்னாட்டு ஒரு நபர் காட்சி விழாவில் காந்தாரி நாடகம் நடத்தப்பட்டது. உலகின் மிகப்பெரிய பத்து நிமிட நாடகத் திருவிழாவில் 2009 ஆம் ஆண்டு டேவிட் சார்பேவின் மந்த்ராகோரா என்ற நாடகத்தில் நடித்தார். சிட்னி நகரின்சார்ட்டு+சுவீட் தளத்தில் இவ்வாய்ப்பு ஐசுவர்யாவுக்குக் கிடைத்தது. இவ்விழாவில் சிறந்த நடிகை' விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்திய ஆத்திரேலியர் என்ற சிறப்பைப் பெற்றார்.[15] கேரி பெப்பர் எழுதிய 'ஐரிசு சிடீவ் என்ற நாடகத்தின் மூலம் இந்த சிறப்பு கிடைத்தது. சிட்னியின் சார்ட்டு+சுவீட் அமைப்பு 2014 ஆம் ஆண்டு இந்நாடகத்தை நடத்தியது.[16] 2006 ஆம் ஆண்டில் அமெரிக்க திரைப்படமான பியாண்ட் லைப் என்ற திரைப்படத்தில் இவர் ஒரு நிர்வாக தயாரிப்பாளராகவும் நட்டிகையாகவும் பணியாற்றினார்.[17] வானொலி நிகழ்ச்சிகளுக்கான ஆவணப்படங்களுக்கும் இவர் விளக்கம் அளித்துள்ளார்.[18] ஆத்திரேலியாவின் ஓபெரா நிறுவனத்தின் தயாரிப்பான லக்மாவிற்கான ஆலோசனையில் கலந்து கொண்டார்.[19]

மேற்கோள்கள்

தொகு
  1. Nidhi, Aishveryaa. "About". Aishveryaanidhi. Archived from the original on 3 April 2019. பார்க்கப்பட்ட நாள் 11 May 2015.
  2. Ashok Kumar. "Abhinay honoured with St.George "community group of the year" award for 2014". Theistimes. http://www.theistimes.com/abhinay-honoured-with-st-george-community-group-of-the-year-award-for-2014/. பார்த்த நாள்: 11 May 2015. 
  3. Vikrant Kishore. "Short-N-Sweet-Bollywood-Festival-in-Sydney". www.bollyoz.com. https://www.bollyoz.com/single-post/2015/09/19/Short-N-Sweet-Bollywood-Festival-in-Sydney/. பார்த்த நாள்: 15 June 2017. 
  4. Astha Singh. "so-you-think-you-can-dance/". Indian Link இம் மூலத்தில் இருந்து 4 ஆகஸ்ட் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180804231754/http://www.indianlink.com.au/so-you-think-you-can-dance/?26March2015. பார்த்த நாள்: 15 June 2017. 
  5. "Nurturing Hindi culture". The Leader. Maria Galinovic. பார்க்கப்பட்ட நாள் 13 May 2015.
  6. Rachael Hocking. "first day indian actor bringing traditional dance and theatre australia" இம் மூலத்தில் இருந்து 19 பிப்ரவரி 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170219022810/http://www.sbs.com.au/news/article/2016/01/19/first-day-indian-actor-bringing-traditional-dance-and-theatre-australia. பார்த்த நாள்: 25 Feb 2017. 
  7. "Aishveryaa Nidhi's migration story (video)". Migration Heritage Centre. NSW Migration Heritage Centre and Hurstville City Library, Museum & Gallery. பார்க்கப்பட்ட நாள் 12 May 2015.
  8. Ashok Kumar (2 Jan 2009). "AISHVERYAA-NIDHI-PERFORMS-IN-SHORT-WORLDS-BIGGEST-FESTIVAL-OF-TEN-MINUTE-PLAYS". http://WWW.THEISTIMES.COM/AISHVERYAA-NIDHI-PERFORMS-IN-SHORT-WORLDS-BIGGEST-FESTIVAL-OF-TEN-MINUTE-PLAYS/=http://www.theistimes.com. பார்த்த நாள்: 30 June 2017. [தொடர்பிழந்த இணைப்பு]
  9. "Aishveryaa Nidhi-starrer Mandragora wins Short & Sweet festival WK I". Theistimes. Ashok Kumar. பார்க்கப்பட்ட நாள் 12 May 2015.
  10. Ipshita Mitra. "Mahabharata, through the 'eyes' of Gandhari". Times of India. http://timesofindia.indiatimes.com/nri/art-culture/Mahabharata-through-the-eyes-of-Gandhari/articleshow/14339267.cms. பார்த்த நாள்: 13 May 2015. 
  11. Neha Saini. "Bringing Gandhari alive as a rebel". Tribune India. http://www.tribuneindia.com/2012/20120622/asrtrib.htm#5. பார்த்த நாள்: 13 May 2015. 
  12. "A women of many shades". DNA. DNA correspondent. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 25 Feb 2017.
  13. "Indian Drama Festival in Sydney Fringe". Art News Portal. பார்க்கப்பட்ட நாள் 25 Feb 2017.
  14. "Aishveryaa Nidhi's GANDHARI...IN SEARCH OF LIGHT to Play Hollywood Fringe". Broadway World இம் மூலத்தில் இருந்து 16 நவம்பர் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211116025148/https://www.broadwayworld.com/los-angeles/article/Aishveryaa-Nidhis-GANDHARIIN-SEARCH-OF-LIGHT-to-Play-Hollywood-Fringe-20160520. பார்த்த நாள்: 25 Feb 2017. 
  15. "A Safe Pair Of Hands Wins SHORT+SWEET 2009". Australian Stage reporter. http://www.australianstage.com.au/news/sydney/a-safe-pair-of-hands-wins-short--sweet-2009-2267.html. பார்த்த நாள்: 17 August 2015. 
  16. Shveata Chandel Singh. "Shveata Chandel Singh". Public Telegraph இம் மூலத்தில் இருந்து 11 நவம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161111223438/http://publictelegraph.com/abhinays-talent-win-accolades-at-shortsweet-festival/. பார்த்த நாள்: 25 Feb 2017. 
  17. Ashok Kumar. "Hone Your Skills as a Script Writer". TheIndianSubContinentTimes. http://www.theistimes.com/hone-your-skills-as-a-script-writer/. பார்த்த நாள்: 11 May 2015. 
  18. "Colour No Bar". The Indian Sun. Poornima Koonath. பார்க்கப்பட்ட நாள் 12 May 2015.
  19. Shveata Chandel Singh. "life-and-all-that-drama". TheIndianSun. http://www.theindiansun.com.au/life-and-all-that-drama/. பார்த்த நாள்: 25 Feb 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐசுவர்யா_நிதி&oldid=4162546" இலிருந்து மீள்விக்கப்பட்டது