ஐசோசயனைடு டைகுளோரைடு

வேதிச் சேர்மங்களின் ஒரு வகை

ஐசோசயனைடு டைகுளோரைடுகள் (Isocyanide dichlorides) என்பவை RN=CCl2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் வேதி வினைக்குழுவை கொண்ட கரிம சேர்மங்களைக் குறிக்கும். பாரம்பரியமாக இவை ஐசோசயனைடுகளின் குளோரினேற்றம் மூலம் பெறப்படுகின்றன. பீனைல்கார்பைலமீன் குளோரைடு நன்கு வகைப்படுத்தப்பட்ட ஓர் உதாரணமாகும்.

ஓர் ஐசோசயனைடு டைகுளோரைடு.

தயாரிப்பு

தொகு

கரிம ஐசோதயோசயனேட்டுகளின் குளோரினேற்ற வினை நன்கு நிறுவப்பட்டுள்ளது:[1]

RN=C=S + 2 Cl2 → RN=CCl2 + SCl2

ஆல்க்கைல் ஐசோசயனேட்டுகளை பாசுபரசு பெண்டாகுளோரைடைப் பயன்படுத்தி குளோரினேற்றம் செய்தும் இதை தயாரிக்கலாம்.

RN=C=O + PCl5 → RN=CCl2 + POCl3

சயனோசன் குளோரைடையும் குளோரினேற்றம் செய்து ஐசோசயனைடு டைகுளோரைடு தயாரிக்கலாம்.:[1]

ClCN + Cl2 → ClN=CCl2

வினைகள்

தொகு

ஐசோசயனைடு டைகுளோரைடுகள் பிரீடல் கிராப்ட்சு போன்ற வினைகளில் பங்கேற்கின்றன. இது நீராற்பகுத்தலுக்குப் பிறகு பென்சமைடுகளைக் கொடுக்க வழிவகுக்கிறது:

RN=CCl2 + ArH → RN=C(Cl)Ar + HCl
RN=C(Cl)Ar + H2O → R(H)NC(O)Ar + HCl

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 R. G. Guy (1977). "Syntheses and Preparative Applications of Thiocyanates". In Saul Patai (ed.). Cyanates and Their Thio Derivatives: Part 2, Volume 2. PATAI'S Chemistry of Functional Groups. p. 619-818. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470771532.ch2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780470771532.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐசோசயனைடு_டைகுளோரைடு&oldid=4088208" இலிருந்து மீள்விக்கப்பட்டது