ஐடார் மாகாணம்

துருக்கியின் மாகாணம்

ஐடார் மாகாணம் (Iğdır Province , துருக்கியம்: Iğdır ili ) என்பது துருக்கி நாட்டின் ஒரு மாகாணம் ஆகும். இந்த மாகாணமானது கிழக்கு துருக்கியில் அமைந்து உள்ளது. இந்த மாகாணமானது துருக்கியியன் சர்வ தேச எல்லையை ஒட்டி உள்ளது. இதன் எல்லையில் ஆர்மீனியா நாடு, அசர்பைஜான் ( நக்சிவன் தன்னாட்சி குடியரசு பகுதி ) நாடு மற்றும் ஈரான் நாடு ஆகியவற்றை சர்வதேச எல்லைகளாக உள்ளன. மேலும் துருக்கி நாட்டினுள் இதன் எல்லை மாகாணங்களாக வடமேற்கில் கார்ஸ் மாகாணமும், மேற்கு மற்றும் தெற்கே ஆரே மாகாணமும் போன்றவை எல்லைகளாக உள்ளன. இந்த மாகாணமானது 3,587 கி.மீ 2 பரப்பளவைக் கொண்டுள்ளது. இதன் மக்கள் தொகை 184,418 [1] ( 2010 மதிப்பீடு ) ஆகும். மக்கள் தொகையானது 2000 இல் 168,634 ஆக இருந்தது ( 1990 ல் 142,601 ஆக இருந்தது ). இது முன்னர் கார்ஸ் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்த‍து. பின்னர் அந்த மாகாணத்தின் தென்கிழக்கு பகுதியை பிரித்து இந்த மாகாணமானது 1993 இல் உருவாக்கப்பட்டது.

ஆர்மேனிய மேட்டுநிலங்களின் மிக உயர்ந்த மலையான, அரராத் மலை ( அரே டாஸ் ) தற்போதய துருக்கியின் ஐடார் மாகாணத்தில் உள்ளது, ஆனால் பெரும்பாலான நிலப்பகுதிகள் மலையின் கீழே பரந்த சமவெளியாக உள்ளது. துருக்கியின் இந்த பகுதியின் காலநிலை மிகவும் வெப்பம் மிகுந்த‍து ஆகும். ஐடர் மாகாணத்தில் பருத்தி விளைச்சல் உள்ளது . ஆர்மீனியாவுடனான மூடிய எல்லைப் பகுதியியானது அராஸ் நதியைப் ஒட்டி உள்ளது.

மாகாண தலைநகராக ஐடார் நகரம் உள்ளது. மாகாணத்தின் பெரும்பான்மையான மக்களாக குர்து மக்கள், உள்ளனர் சிறுபான்மையினராக அசர்பைஜானிய மக்கள் உள்ளனர்.[2]

மாவட்டங்கள்

தொகு

ஐடார் மாகாணம் 4 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

மக்கள் வகைப்பாடு

தொகு
 
ஐடார் நகரில் ஒரு தெரு

1886 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஐடார் மாகாணத்தில் (துஸ்லூகா மற்றும் கரகோயுன்லு சேர்க்கப்படவில்லை) 30,647 பேர் இருந்தனர். அவர்களில் 49.6% ஆர்மீனியர்கள், அவர்களில் 38.7% அஜர்பைஜானியர்கள் மற்றும் அவர்களில் 11.7% குர்துகள் என்று இருந்தனர். கரகோயுன்லுவில் ( டாஷ்புருன் ) 20,520 பேர் வாழ்ந்தனர்.   இவர்களில் 11.0% ஆர்மீனியர்கள், 63.5% பேர் அஜர்பைஜானியர்கள், 25.4% பேர் குர்துகள் ஆவர். துஸ்லூகா (குல்ப்) இல் 19,899 பேர் வாழ்ந்தனர். அவர்களில் 23.3% ஆர்மீனியர்கள், 47.5% பேர் அஜர்பைஜானியர்கள், 29.3% பேர் குர்துகள் ஆவர்.[3]

தற்போதைய ஐடார் மாகாணமானது அசர்பைஜானிய மக்கள் மற்றும் குர்து மக்கள் ஆகியோரைக் கொண்ட கலப்பு மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. இந்த இரு இனத்தவரும் மக்கள்தொகையில் ஏறக்குறைய பாதி பேராக உள்ளனர். முந்தைய இனத்தவர்கள் முதன்மையாக மாகாணத்தின் வடக்கு மற்றும் கிழக்கில் வசிக்கின்றனர், பிந்தையவர்கள் மாகாணத்தின் தெற்கு மற்றும் மேற்கில் வசிக்கின்றனர். அரசியல் அறிஞர் நிக்கோல் வாட்ஸ் கூறுகையில், மாகாணத்தின் பெரும்பான்மையான மக்கள் குர்து மக்கள் (2010 நிலவரப்படி ) ஆவர்.[4]

குர்துகள் ஷாஃபி பள்ளியைச் சேர்ந்த சுன்னி இசுலாமியர் முஸ்லிம்கள், அஜர்பைஜானியர்கள் இத்னாஷாரியா பள்ளியைச் சேர்ந்த சியா இசுலாமியர் முஸ்லிம்கள் ஆவர். ஐடார் மாகாணத்தில் கிராமப்புறங்களில் வாழும் மக்கள் தொகையானது, அதன் அண்டை மாகாணங்களை விட அதிக மக்கள் தொகை அடர்த்தி ( 30 மக்கள் / கிமீ 2 ) கொண்டதாக உள்ளது.

குறிப்புகள்

தொகு
  1. "Statistical Institute page". tuik.gov.tr.
  2. Watts, Nicole F. (2010). Activists in Office: Kurdish Politics and Protest in Turkey (Studies in Modernity and National Identity). Seattle: University of Washington Press. p. 167. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-295-99050-7.
  3. "население северо-восточной турции". www.ethno-kavkaz.narod.ru.
  4. Watts, Nicole F. (2010). Activists in Office: Kurdish Politics and Protest in Turkey (Studies in Modernity and National Identity). Seattle: University of Washington Press. p. 167. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-295-99050-7.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐடார்_மாகாணம்&oldid=2869143" இலிருந்து மீள்விக்கப்பட்டது