அரே மாகாணம்

துருக்கியின் மாகாணம்

அரே மாகாணம் (ஆங்கிலம்: Ağrı Province) ( துருக்கியம்: Ağrı ili) துருக்கியின் கிழக்கே அமைந்துள்ளது. இதன் எல்லைகளாகக் கிழக்கே ஈரான், வடகே கர்ச் வடமேற்கில் ஏரிசூரும், தென்மேற்கே முச் மற்றும் பிட்லிசு, தெற்கு பகுதியில் வான், மற்றும் வடகிழக்கில் இக்திர் ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது. இதன் பரப்பளவு 11,376 km² ஆகும். மற்றும் 2010 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 542,022 பேர் ஆகும். மாகாணத்தில் பெரும்பான்மையாக குர்து இன மக்கள் இங்கு வசிக்கின்றனர்.[1] இப்பகுதியில் கணிசமான அசர்பைசானிய சிறுபான்மையினரும் வசிக்கிறனர்.[2][3][4][5][6][7] மாகாண தலைநகரான அரே, 1,650 மீ. உயரம் கொண்ட ஒரு பீடபூமி ஆகும். அரே மாகாணம் எட்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது

நிலவியல்

தொகு

5,137 மீட்டர்கள் (16,854 அடி) உயரமுள்ள கம்பீரமான அராரத் மலையின் அருகிலுள்ள சுழல் வடிவ எரிமலையின் பெயரால் இது அரே என்று அழைக்கப்படுகிறது. துருக்கியின் மிக உயரமான மலை மற்றும் ஆர்மீனியர்களுக்கு இது ஒரு தேசிய சின்னமாகும். இங்கிருந்து அசர்பைசான், ஈரான், சியார்சியா மற்றும் ஆர்மீனியாவின் சில பகுதிகளிலிருந்து காணலாம். மலைக்கு அருகிலுள்ள நகரம் தோசுபயாசாத் ஆகும் .

மாகாணத்தின் 46% மலைப்பகுதி, 29% வெற்று நிலம், 18% பீடபூமி, மற்றும் 7% உயர் புல்வெளி. அலராத் மற்றும் தண்தெரெக் உட்பட 3,000 மீட்டருக்கு மேல் பல சிகரங்களும் உள்ளன. இங்குள்ளச் சமவெளிகள் வளமானவை, எரிமலைகளால் மூடப்பட்டிருக்கும், மேலும் அவை தானியங்கள் மற்றும் மேய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. முராத் ஆற்றின் பல்வேறு துணை நதிகள் (இது பின்னர் புறாத்து நதியில் கலக்கிறது) இப்பகுதி வழியாக பாய்ந்து இந்த சமவெளிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுகிறது. உயர் புல்வெளிகள் மேய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

இங்குள்ள வானிலை மிகவும் குளிராக இருக்கிறது (முக்கியமாக குளிர்காலத்தில் வெப்பநிலை -10 வரை குறைவாக இருக்கும்   °C (14   °F)) மற்றும் மலைப்பகுதிகள் பெரும்பாலும் வெற்று நிலங்களாகவே காணப்படும். மலைகள் வழியாக பல முக்கியமான பாதைகள் மற்றும் வழிகள் உள்ளன.

இன்று

தொகு

முக்கிய பொருளாதாரம் விவசாயம் ஆகும். மக்களும் மேய்ச்சல் நிலத்தை நம்பி வாழ்கின்றனர். கோடைகாலத்தில் ஏறுவதற்கும், மலையேறுவதற்கும், குளிர்காலத்தில் பனிச்சறுக்கு விளையாடுவதற்கும் அரே சுற்றுலாப் பயணிகளை மலைக்கு ஈர்க்கிறது. சுற்றுலா ஆர்வமுள்ள பல இடங்கள் இங்கு அமைந்துள்ளது.

மக்கள் தொகை

தொகு

அரேவின் இன் மக்கள் தொகை 2000 முதல் 550 ஆயிரம் வரை நிலையானது. துருக்கியின் மொத்த இனப்பெருக்க விகிதத்தில் அரே இரண்டாவது இடத்தில் உள்ளது . பெருநகரப் பகுதிகளில் ( இசுதான்புல் மற்றும் அங்காரா போன்றவை) சிறந்த வாழ்க்கையைத் தேடுவதற்காக பலர் மாகாணத்தின் தொலைதூர கிராமப்புறங்களை விட்டு வெளியேறுகிறார்கள். மக்கள்தொகை வளர்ச்சி மிகக் குறைவாக இருப்பதற்கு அதுவே காரணம்.

பெரும்பான்மையான அதன் மக்கள் தொகையில் ஏறத்தாழ மூன்று இலட்சத்து பதினைந்தாயிரம் பேர் (59%) நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர். நகரமயமாக்கல் விகிதம் இன்னும் அதிகரித்து வருகிறது. இருப்பினும், ஆரே விவசாயம் முக்கியமானதாக இருக்கிறது, ஏனெனில் அதிக மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர், விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள். 1965 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் கிராமப்புற மக்கள் தொகை ஒரு இலட்சத்து தொன்னூறாயிரத்திலிருந்து இரண்டு இலட்சத்து இருபதோராயிரயிரமாக குறைந்தது.

குறிப்புகள்

தொகு
  1. Watts, Nicole F. (2010). Activists in Office: Kurdish Politics and Protest in Turkey (Studies in Modernity and National Identity).
  2. "Azerbaijani in agri".
  3. "AZERI in agri".
  4. "Karapapak in ağri".
  5. "Ağri,karapapak". Archived from the original on 2019-11-10.
  6. "Ağrı'da 'Şah Bezeme' Geleneği Yüz Yıllardır Devam Ediyor". m.haberler.com.
  7. https://www.sondakika.com/. "Ağrı'da 'Şah Bezeme' Geleneği Yüz Yıllardır Devam Ediyor". m.sondakika.com. Archived from the original on 2020-01-19. பார்க்கப்பட்ட நாள் 2019-11-10. {{cite web}}: External link in |last= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரே_மாகாணம்&oldid=3893990" இலிருந்து மீள்விக்கப்பட்டது