கருவள வீதம்

மக்கள்தொகையின் முழு கருவள வீதம் (total fertility rate, TFR), சுருக்கமாக கருவள வீதம், கால முழு கருவள வீதம் (PTFR) அல்லது முழு கால கருவள வீதம் (period total fertility rate, TPFR) என பலவாறு அழைக்கப்படும்) ஓர் பெண் தனது வாழ்நாளில் பெறும் குழந்தைகள் எண்ணிக்கையின் சராசரியாகும்.இது (1) தற்போதுள்ள வயதிற்குரிய கருவள வீதத்தில் (ASFRs) அவளது வாழ்நாள் முழுவதும் பெறக்கூடியது மற்றும் (2) அவள் தனது பிறப்பிலிருந்து அவளது கருத்தரிக்கும் வாழ்நாள் முழுமையும் கருத்தில் கொண்டு கணக்கெடுக்கப்படுகிறது..[1]

இது ஓர் செயற்கை வீதமாகும். எந்த ஓர் குறிப்பிட்ட பெண்களின் குழுவின் கருவளத்தினையும் சார்ந்தது இல்லை. தவிரவும் உண்மையில் அவர்கள் வாழ்நாளில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையை சார்ந்தும் இல்லை. அவர்களது கருத்தரிப்புக் காலத்தில் (உலக புள்ளியியல் பாவனைகளில் இது 15-44 அல்லது 15-49) வயதுசார் கருவள வீதங்களைக் கொண்டு கணக்கிடப்பட்டதாகும்.

முழு கருவள வீதங்கள் vs. தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி வரைபடம், 2009. 50 இலக்கத்திற்கு மேற்பட்ட மக்கள்தொகை நாடுகளே காட்டப்பட்டுள்ளன. மூலம்: CIA World Fact Book

வளர்ந்த நாடுகள் பொதுவாக குறைந்த கருவள வீதங்களைக் கொண்டுள்ளன. இதற்கு கூடுதல் செல்வச்செழிப்பு, கல்வி மற்றும் நகர்புறமாதல் காரணிகளாக கருதப்படுகிறது. தவிர இறப்பு வீதமும் குறைந்துள்ளது. தவிர உயர்கல்வியில் கூடுதல் அகவைகளை கழிப்பதால் திருமணம் மற்றும் கருத்தரித்தல் தள்ளிப்போடப்படுகிறது.

ஆனால் வளரும் நாடுகளில், வேலைப்பளுவை பகிர்ந்து கொள்ளவும் வயதான காலத்தில் பெற்றோரை கவனித்துக்கொள்ளவும் என குடும்பங்கள் குழந்தைகள் பெறுவதை விரும்புகிறார்கள். குடும்பக் கட்டுப்பாடு சாதனங்கள் எளிதாக கிடைக்காதிருத்தல், பெண்கள் கல்வியறிவு குறைவு, குறைந்த வயது திருமணங்கள் ஆகிய காரணிகளால் கருவள வீதம் உயர்ந்த நிலையில் உள்ளது. உலகின் குறைந்த கருவள வீதம் (வரலாறு அறிந்தவரையில்) 0.41 சீனாவின் ஜியாமுசி (Jiamusi) நகரிலுள்ள சியாங்க்யாங்க் (Xiangyang) பகுதியில் பதிவாயுள்ளது[2] சீனாவைத் தவிர்த்து 0.80 கிழக்கு செர்மனியில் 1994ம் ஆண்டு பதிவாயுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Total fertility rate definition from CIA world factbook". Archived from the original on 2015-04-28. பார்க்கப்பட்ட நாள் 2009-09-10.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2007-06-16. பார்க்கப்பட்ட நாள் 2009-09-10.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருவள_வீதம்&oldid=3548194" இலிருந்து மீள்விக்கப்பட்டது