ஐதரசன் ஆற்றல் தொழில்நுட்பத்திற்கான அனைத்துலக மையம்

ஐக்கிய நாடுகள் சபை தொழிற்துறை வளர்ச்சி நிறுவனத்தின் ஒரு சிறப்பு நிறுவனம்

ஐதரசன் ஆற்றல் தொழில்நுட்பத்திற்கான அனைத்துலக மையம் (The International Centre for Hydrogen Energy Technologies) என்பது ஐக்கிய நாடுகள் சபை தொழிற்துறை வளர்ச்சி நிறுவனத்தின் ஒரு சிறப்புத் திட்டமாகும். குறிப்பாக வளர்ந்துவரும் நாடுகளின் எதிர்கால பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கத்துடன், ஐதரசன் ஆற்றல் தொழில்நுட்பங்களின் சாத்தியமான செயலாக்கங்களை ஆதரிப்பதும் அவற்றை செய்துகாட்டி ஊக்குவிப்பதும் இம்மையத்தின் பணியாகும். ஐக்கிய நாடுகள் சபை தொழிற்துறை வளர்ச்சி நிறுவனத்திற்கும் துருக்கிய ஆற்றல் மற்றும் இயற்கைவளங்கள் அமைப்புக்கும் இடையே ஏற்பட்ட அறக்கட்டளை நிதி ஒப்பந்தம் மூலம் 2003 ஆம் ஆண்டில் ஐதரசன் ஆற்றல் தொழில்நுட்பத்திற்கான அனைத்துலக மையம் வியன்னாவில் தொடங்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கிய இந்நிறுவனம் 2012 ஆம் ஆண்டு டிசம்பரில் மூடப்பட்டது [1]

சின்னம்

மேற்கோள்கள்

தொகு
  1. Europe and NIS Programme in Action 2009, p.11-13. UNIDO, Vienna, 2009.

ஆதாரங்கள்

தொகு