ஐதராக்சில் அலுமினியம் பிசு(2-எத்தில்யெக்சேனோயேட்டு)
ஐதராக்சில் அலுமினியம் பிசு(2-எத்தில்யெக்சேனோயேட்டு) (Hydroxyl aluminium bis(2-ethylhexanoate)) என்பது C16H31AlO5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட வேதிச்சேர்மம் ஆகும். 2-எத்தில்யெக்சேனாயிக் அமிலம் மற்றும் அலுமினியம் (III) ஆகியனவற்றிலிருந்து இது வருவிக்கப்படுகிறது[1]. பெயரளவில் Al(OH)(O2CCHEt(CH2)3CH3)2 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட ஒருங்கிணைவுச் சேர்மமாகக் கருதப்படுகிறது. வாய்ப்பாட்டில் உள்ள Et = எத்தில் குழுவைக் குறிக்கிறது. இச்சேர்மத்தின் இயைபைக் காண்கையில் இது ஓர் ஒருபடித்தான சேர்மமாக இல்லை என்பதைக் காட்டுகிறது. கூழ்மக் கலவையான நாபாம் உள்ளிட்ட பல நீர்மங்களின் பாகுத் தன்மையை அதிகரிக்கும் முகவராக இதைப் பயன்படுத்துகிறார்கள். சிறிதளவு நீருறிஞ்சும் தன்மையையும் இச்சேர்மம் கொண்டுள்ளது.
![]() | |
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
ஐதராக்சில் அலுமினியம் பிசு(2-எத்தில்யெக்சேனோயேட்டு); அலுமினியம் 2- எத்தில்யெக்சேனோயேட்டு; அலுமினியம் 2-எத்தில்கேப்ரோயேட்டு
| |
இனங்காட்டிகள் | |
30745-55-2 ![]() | |
பண்புகள் | |
C16H31AlO5 | |
வாய்ப்பாட்டு எடை | 330.40 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
![]() ![]() ![]() | |
Infobox references | |
மேற்கோள்கள் தொகு
- ↑ Hershey, Harry C.; McCauley, Victoria S.; Kuo, Jeffrey T.; McMillan, Michael L. (1984). "Solution properties of association colloids of twelve aluminum monohydroxy disoaps in nonaqueous solutions". Journal of Colloid and Interface Science 101 (2): 424–35. doi:10.1016/0021-9797(84)90054-7.