ஐதராபாத்து இல்லம்
ஐதராபாத்து இல்லம் (Hydrabad House, இந்தி: हैदराबाद भवन, உருது: حيدراباد هاؤز), என்பது புதுதில்லியில் இந்தியாவின் வாயில் வடமேற்கில் அமைந்துள்ள இந்திய அரசின் மாளிகை. புகழ்பெற்ற பிரித்தானியக் கட்டடக்கலை வல்லுநர் லூட்டியனால் இது ஐதராபாத்து நிசாம் ஓஸ்மான் அலி கானுக்காக அமைக்கப்பட்டது.[1] 8.77 ஏக்கரில் அமைந்துள்ள இம் மாளிகை வண்ணத்துப் பூச்சி வடிவிலானது. மொகலாய-ஐரோப்பிய கட்டடக்கலவையின் கலவையாய் இது திகழ்கிறது. மாளிகையின் முகப்பில் குவிமாடம் அமைந்துள்ளது.
ஐதராபாத்து இல்லம் | |
---|---|
பொதுவான தகவல்கள் | |
கட்டுமான ஆரம்பம் | 1926 |
நிறைவுற்றது | 1928 |
செலவு | £200,000 |
உரிமையாளர் | முன்னம்: ஐதராபாத் நிசாம் தற்போது: இந்திய அரசு |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தளப்பரப்பு | 8.77 ஏக்கர் |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | சர் எட்வின் லூட்டியன் |
பிற தகவல்கள் | |
அறைகள் எண்ணிக்கை | 36 |
1947 ஆம் ஆண்டில் இந்திய விடுதலைக்குப் பின் ஐதராபாத் நிசாம் இம் மாளிகையை இந்திய அரசிற்குத் தந்து விட்டார். அன்று முதல் வெளிநாட்டுத் தலைவர்களின் விருந்தோம்பல், முக்கியப் பத்திரிக்கைக் கூட்டங்கள், அரசு விருந்துகள் போன்றவற்றுக்காக இது பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Sharma, Manoj (2011-06-08). "Of princes, palaces and plush points". ஹிந்துஸ்தான் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 2013-10-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131010152053/http://www.hindustantimes.com/India-news/NewDelhi/Of-princes-palaces-and-plush-points/Article1-707274.aspx. பார்த்த நாள்: 13 December 2013.