குவிமாடம்
குவிமாடம் (dome) என்பது பல்வேறு கட்டிடங்களில் காணப்படுகின்ற கட்டிடக்கலைக் கூறுகளில் ஒன்று. இது ஒரு வகைக் கூரை அமைப்பு ஆகும். இது ஏறத்தாழக் கவிழ்த்து வைக்கப்பட்ட உள்ளீடற்ற அரைக் கோள வடிவத்தை உடையது. எனினும் குவிமாடங்களின் வடிவங்களில் வேறுபாடுகளையும் அவதானிக்கமுடியும். சில கட்டிடங்களில் குவிமாடங்கள் அரைக்கோள வடிவில் அல்லாது அதனிலும் உயரம் குறைந்த கோளத் துண்டு வடிவம் கொண்டவையாக இருக்கின்றன. வெங்காய வடிவம் கொண்ட குவிமாடங்களும் பரவலாகக் காணப்படுகின்றன. மாஸ்கோவிலுள்ள புனித பசில் தேவாலயத்திலுள்ள குவிமாடங்கள் இவ்வகைக் குவிமாடங்களுக்கு நல்ல எடுத்துக்காட்டு. இஸ்லாமியக் கட்டிடக்கலை சார்ந்த கட்டிடங்களிலும் இவ்வகைக் குவிமாடங்களைக் காண முடியும். கூரை தொடங்கும் இடத்திலிருந்து அமையும் குவிமாடங்களும், இவ்விடத்திலிருந்து உயர்த்தி அமைக்கப்படும் குவிமாடங்களும் உள்ளன.
குவிமாடங்கள் நீண்ட வரலாற்று பாரம்பரியம் கொண்ட கட்டட அமைப்பாக உள்ளன அவை சேறு, பனி, கல், மரம், செங்கல், கான்கிரீட், உலோகம், கண்ணாடி நெகிழி ஆகியவற்றால் பல நூற்றாண்டுகளாக கட்டப்பட்டு வருகின்றன. குவிமாடக்கோபுரமானது அடக்குமறை, தெய்வீகம், வானக்கோளம் அரசாங்க மரபுகள் போன்றவற்றுடன் தொடர்படையவையாகக் காலப்போக்கில் உருவாக்கப்பட்டன.
துவக்கக்கால மெசொப்பொத்தேமியாவிலிருந்து குவிமாடங்கள் காணப்படுகின்றன, இவை இங்கிருந்தே பரவி இருக்கலாம். இவை பண்டைய பாரசீகம், ஹெலனியர், ரோமன், சீனக் கட்டிடக்கலை போன்றவற்றில் காணப்படுகின்றன, அத்துடன் பல நவீனகால கட்டிட வளாகங்களில் இவை காணப்படுகின்றன. இவை பைசண்டைன் மற்றும் இடைக்கால இஸ்லாமிய கட்டிடக்கலையில் பிரபலமாக இருந்தன என்பதற்கு, நடு ஐரோப்பாவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் இருந்து பல உதாரணங்கள் உள்ளன. துவக்க நவீன காலத்தில் இத்தாலியில் இருந்து மறுமலர்ச்சி பாணி பிற பகுதிகளுக்குப் பரவியது. கணிதத்தில் முன்னேற்றங்கள், பொருட்கள் மற்றும் உற்பத்தி நுட்பங்கள் வளர்ச்சி ஆகியவற்றால் புதிய குவிமாட வகைகள் உருவாயின. நவீன உலகின் கோபுரங்கள் சமயக் கட்டிடங்கள், சட்டமன்றக் கூடங்கள், விளையாட்டு அரங்கங்கள் போன்ற பல்வேறு செயல்பாட்டு கட்டமைப்புகளில் குவிமாடங்களைக் காணலாம்.
பெயராய்வு
தொகுகுவிமாடத்தைக் குறிப்பிடும் ஆங்கிலச் சொல்லான "டோம்" என்ற சொல் லத்தீன் மொழியின் டோம்ஸில் ("வீடு") என்ற சொல்லில் இருந்து வந்தது. அதன் கூரை வடிவத்தைப் பொருட்படுத்தாமல், டோமஸ் டீ அல்லது "கடவுளின் வீடு" போன்ற புகழ்பெற்ற வீட்டின் பெயரில் இருந்து தோன்றியது. இது இத்தாலிய மொழியில் டூமொமோ (duomo) என்றும், ஜெர்மன் / ஐஸ்லாண்டிக் / டேனிஷ் மொழிகளில் dom ("கதீட்ரல்") என்றும் குறிப்பிடப்படுகிறது. மேலும் 1656 ஆம் ஆண்டின் பிற்பகுதிவரை dome என்ற ஆங்கிலச் சொல்லானது, நகரத்தில் உள்ள "டவுன்-ஹவுஸ், கில்ட்-ஹால், ஸ்டேட் ஹவுஸ், மீட்டிங் ஹவுஸ்" ஆகியவற்றை குறிக்கும் பொருளில் வழங்கப்பட்டது. பிரெஞ்சு மொழியில் 1660 வரை dosme என்ற சொல் கோபளா வால்ட் என்ற கட்டட அமைப்பைக் குறிப்பிடும் பொருள் பெற்று வந்தது, பதினேழாம் நூற்றாண்டில் இந்த பிரெஞ்சில் இச்சோல் படிப்படியாக ஆங்கிலத்தில் குறிப்பிடும்படக்கூடிய குவிமாடத்தை குறிப்பிடக்கூடிய சொல்லாக ஆனது, இவ்மைப்பில் மிகவும் சிறப்பு மிக்கதாக கடவுளுக்கான நினைவுச்சின்னங்கள் கோபுரங்களுடன் கட்டப்பட்டன, மேலும் தொழில்நுட்ப விதிமுறைகள் மற்றம் தேவையின் அறிவியல் பிரதிபலிப்பாக ஆனது.[1]
சொல்
தொகுகுவிமாடம் என்பது வளைந்த பகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு வட்டவடிவ வளைவு ஆகும், அதாவது அதன் மையச் செங்குத்து அச்சு சுற்றிய வட்டமாக இருக்கும். [2]
சில நேரங்களில் "தவறான" குவிமாடங்கள் என்று அழைக்கப்படுபவை, கட்டுமானத்தில் உள்ள கற்கள் ஒவ்வொன்றும் கிடைமட்ட அடுக்குகளாக மேல்நோக்கி கட்டப்பட்டவையாக இருக்கும். [3] "தவறான" குவிமாடம் மரக் குவிமாடம் என்றும் குறிப்பிடப்படுகிறது.[4] "உண்மையான" குவிமாடங்கள் என்பவை ஆப்பு வடிவ கற்களை உறுப்புக் கூறுகளாகக் கொண்டு கட்டப்பட்டவை.
குவிமாடமானது அதன் உயரம் செல்லச்செல்ல உள்ளபக்கமாக வளைந்து இறுதியில் கூடும். குவிமாடத்தின் உச்சிப்பகுதி "மகுடம்" (crown) எனப்படும். குவிக்கட்டுமானத்தின் உள் பக்கம் "கவானகம்" (intrados) என்று அழைக்கப்படுவதுடன் வெளிப்புறம் "கவான்புறம்" (extrados) என்றும் அழைக்கப்படுகிறது. [5] "விதான இடுப்பு" (haunch) என்பது குவிமாடத்தின் அடிப்பகுதி மற்றும் மேல்வரிசைக்கு இடைப்பட்ட பகுதியில் அமைக்கப்படும் ஒரு வளைவுப் பகுதியின் பெயராகும். [6]
குப்போலா என்ற சொல் "குவிமாடம்" என்பதற்கான மற்றொரு சொல்லாகும், இது பொதுவாக ஒரு கூரை அல்லது கோபுரத்தின் மீது உள்ள ஒரு சிறிய குவிமாடத்தைக் ( சிறுகோபுரம்) குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. [7] "கும்போலா" என்ற சொல்லானது உள் குவிமாடத்தைக் குறிப்பிடவும் பயன்படுத்தப்பட்டது. [8]
"பறை" (Drums) அல்லது டோலோபேட் (Tholobate) என்று அழைக்கப்படுவது, குவிமாடத்தைத் தாங்கி நிற்கும் சன்னல்களைக் கொண்டோ அல்லது இல்லாமலோ உள்ள உருளை வடிவிலோ அல்லது பலகோண வடிவிலோ உள்ளச் சுவர்களைக் குறிப்பதாகும். டம்போர் அல்லது லாந்தரின் குவிந்தப் பகுதியை தாங்கியபடி உள்ள சமமான கட்டமைப்பைக் குறிப்பது ஆகும்.[9]
குவிமாடத்தின் அமைப்பு
தொகுகுவிமாடத்தின் வளைந்த வடிவமே அதற்கு உறுதியைக் கொடுக்கிறது. இரு பரிமாண அமைப்பான கவானின் உறுதிக்கான அதே தத்துவத்தின் அடிப்படையிலேயே முப்பரிமாண அமைப்பான குவிமாடம் உறுதியுள்ளதாக இருக்கின்றது. கவான் அமைப்பை அதன் நிலைக் குத்து அச்சில் சுழற்றுவதன் மூலம் குவிமாட அமைப்புப் பெறப்படுவதாகக் கொள்ளலாம். தட்டையான கூரை அமைப்புக்களைப் போலன்றி, குவிமாடங்களின் வடிவம் காரணமாக, அவற்றின் எல்லாப் பகுதிகளிலும் அழுத்த விசையே தொழிற்படுவதனால் செங்கற் கட்டுமானத்தின் மூலம் கூடக் குவிமாடங்களை அமைக்க முடிந்தது. ஆரம்பகாலங்களில் குவிமாடக் கூரைகளைத் தாங்குவதற்காகச் சுவர்களை வட்டமாக வளைத்துக் கட்டவேண்டியிருந்தது அல்லது வட்டவடிவமாகத் தூண் நிரைகளை அமைக்க வேண்டியிருந்தது. இதனால் குவிமாடங்களுக்குக் கீழ் அமையும் இடம் அல்லது அறைகளின் தள வடிவம் வட்டமாகவே அமைய வேண்டியிருந்தது.
இப்பிரச்சினைக்குத் தீர்வாக பைசண்டைன் காலப் பகுதியில் புதிய அமைப்பு முறையொன்று அறிமுகப் படுத்தப்பட்டது. இதன் மூலம் சதுரமான அறைகள், கூடங்கள் முதலியவற்றுக்குக் குவிமாடக் கூரைகளை அமைக்க வழியேற்பட்டது. இத்தகைய அமைப்பு பெண்டெண்டிவ் (pendentive) எனப்படுகிறது.
பல விளையாட்டு அரங்கங்கள் குவிமாடங்கள் கொண்டவையாக உள்ளன. குறிப்பாக மாறுகின்ற தட்பவெட்ப சூழலைக் கொண்ட இடங்களில் இவை அமைக்கப்படுகின்றன. இவ்வகையில் கட்டப்பட்ட முதல் அரங்கம் ஒன்டோரியோவின் டொரென்டோ நகரில் கட்டப்பட்ட திறந்து மூடும் வசதி கொண்ட "ஸ்கை டோம்" ஆகும்.
பிரபலமான குவிமாடங்கள்
தொகுகட்டிமுடிக்கப்பட்ட ஆண்டின் அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளது:
- 27 BC – பந்தியன் (Pantheon), ரோம், இத்தாலி.
- 537 – ஹேகியா சோபியா, கொன்ஸ்டண்டினோப்பிள் , துருக்கி.
- 691 – பாறைக் குவிமாடம் (Dome of the Rock), ஜெரூசலெம்.
- 1312 – சொல்தானியே குவிமாடம் (Dome of Soltaniyeh), ஈரான்.
- 1436 – புளோரன்ஸ் பேராலயம், இத்தாலி
- 1502 - டோனடோ பிராமன்டேல்,ரோம்,இத்தாலி
- 1593 – புனித பேதுரு பேராலயம், வத்திக்கான்.
- 1616 – நீல மசூதி, இஸ்தான்புல், துருக்கி.
- 1653 – தாஜ் மகால், ஆக்ரா, இந்தியா.
- 1659 – கொல் கும்பாஸ், பிஜப்பூர், கர்நாடகம், இந்தியா
- 1708 - லெஸ் இன்வாளிடேஸ்,பாரிஸ்,பிரான்ஸ்
- 1708 – புனித பவுல் பேராலயம், இலண்டன், இங்கிலாந்து.
- 1749 - ராட்கிளிப் காமேரா,ஆக்ஸ்போர்ட்,இங்கிலாந்து
- 1858 – சென். ஐசாக் தேவாலயம், சென். பீட்டர்ஸ்பேர்க், ரஷ்யா.
- 1850கள் - ஐக்கிய அமெரிக்க தலைமையகம்,வாஷிங்டன் டி.சி,அமெரிக்கா
- 2000 மில்லெனியம் டோம், இலண்டன், இங்கிலாந்து.
பொதுவான வகைகள்
தொகுகுலோய்ஸ்டர் அறை குவிமாடம்
தொகுஇவை கிடைமட்டமாக பல்கோண வடிவத்தை கொண்ட குவிமாடமாகும் மேலும் இவை பகுதி குவிமாடம் அல்லது பலகோண குவிமாடம் என்று அழைக்கப்படும்.இந்தவகையில் புளோரன்ஸ் கதீட்ரல் மீது ஃபிலிப்போ ப்ருன்செலிசி என்ற இடத்தில் உள்ள எண்கோண குவிமாடம் மற்றும் அமெரிக்காவின் மூன்றாவது ஜனாதிபதி தாமஸ் ஜெபர்சன் அவரது தோட்ட வீட்டில் நிறுவப்பட்ட எண்கோண குவிமாடம்.
கோளப்பரப்பு குவிமாடம்
தொகுகோளப்பரப்பு குவிமாடங்களின் புவிப்பரப்பு கோளங்களின் மேல் பகுதியில் அமைந்துள்ளது.அது வேறுபட்ட முக்கோணங்களை கொண்ட ஒரு கட்டமைப்பாகும்.
வெங்காயம் குவிமாடம்
தொகுவெங்காயம் குவிமாடம் அல்லது குமிழ்க்கும்மட்டம் அதிகமாக ரஷ்யா, துருக்கி, இந்தியா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றது.பொதுவாக உருசிய மரபுவழி தேவாலயங்கள் இத்தகைய குவிமாடத்தின் மீது அமைக்கப்படுகிறது.இதன் உயரம் பொதுவாக அதன் அகலம் அதிகமாக கொண்டுள்ளது. இதற்கு சிறந்த எடுத்துகாட்டு செயிண்ட் பசில் மாஸ்கோ கதீட்ரல் மற்றும் தாஜ் மஹால் ஆகும். 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் நெதர்லாந்து நாடுகளில் இவை அதிகமாக உருவாக்கப்பட்டன.
முட்டை வடிவ குவிமாடம்
தொகுமுட்டை வடிவ குவிமாடங்கள் கி.மு. 4000 ஆம் முதலே அனத்தோலியா பகுதியில் உருவாக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பட்டுள்ளது.இவை மறுமலர்ச்சி மற்றும் பரோக் பாணியில் மிக பிரபலமானதாகும்.இம்முறையில் பிரான்செஸ்கோ மார்க் பசிலிக்கா இம்முறையில் கட்டப்பட்டது.
பரவளைய குவிமாடம்
தொகுபரவளைய குவிமாடம் ஒரு தனிப்பட்ட அமைப்பாகும் அதன் வளைவு அழுத்தமானது சமமாக பரவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால் அது வலிமையான அமைப்பாக உள்ளது. எனவே அது பரவலாக பண்டைய காலத்தில் பயன்பட்டது.
தட்டு வடிவ குவிமாடம்
தொகுஒரு தட்டு குவிமாடமானது வடிவியல் ஒரு வட்ட அடித்தளத்தையும் உயரம் குறைந்த ஒரு அரைக்கோளத்தைக் கொண்டதாக உள்ளது.இவ்வமைப்பின் மூலம் குறைவான எதிரொலிப்பே உருவாகிறது.மேலும் மிகப்பெரிய குவிமாடங்கள் இந்த வகையைச் சேர்ந்ததாகவே உள்ளது. இவைபெரும்பாலும் பைசண்டைன் தேவாலயங்கள் மற்றும் ஒட்டோமான் மசூதிகளில் அரிதாக வெளிப்புறமாகக் காணப்படும்.மற்றும் இந்தியா, பாக்கிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் உள்ள பெரும்பாலான மசூதிகள் இவ்வகையைச் சேர்ந்ததாக உள்ளது.
குடை குவிமாடம்
தொகுஇவ்வகை பூசணிவடிவம்,முலாம்பழ வடிவம், பாராசூட் வடிவம் மற்றும் பிரிவுகளையுடைய வடிவம் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.இந்த வகையில் குவிமாடமானது பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அப்பிரிவுகளில் அதன் எடையை தாங்குவதற்கான அமைப்பை உடையதாக கட்டப்பட்டுள்ளது. "ஹேகியா சோபியா" குவிமாடத்தில் இந்த அமைப்புகளுக்கிடையே ஜன்னல்கள் உடையதாக இதன் மூலம் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் செயின்ட் பீட்டர் பசிலிக்காவின் மத்திய குவிமாடம் இந்த முறை பயன்படுத்தி கட்டப்பட்டதாகும்.
இவற்றையும் பார்க்கவும்
தொகுவெளியிணைப்புகள்
தொகு- The Dome of Brunelleschi, Florence virtual reality movie and pictures
மேற்கோள்கள்
தொகு- ↑ Smith 1950, ப. 5.
- ↑ Hourihane 2012, ப. 301.
- ↑ Huerta 2007, ப. 212.
- ↑ Hourihane 2012, ப. 302.
- ↑ Dumser 2010, ப. 436.
- ↑ Fleming, Honour & Pevsner 1991, ப. 203.
- ↑ Fleming, Honour & Pevsner 1991, ப. 114.
- ↑ Technical 1872, ப. 252.
- ↑ Ching 2011, ப. 63.