இஸ்லாமியக் கட்டிடக்கலை

இஸ்லாமிய கட்டடக்கலையானது இஸ்லாமிய வரலாற்றின் ஆரம்பகால வரலாற்றிலிருந்து இன்றைய தினம் வரை மதச்சார்பற்ற மற்றும் சமய பாணியிலான பரந்த அளவிலான பரப்பளவை உள்ளடக்கியதாகும்.ரோம், பைசாண்டின், பாரசீகம் மற்றும் 7, 8 ஆம் நூற்றாண்டுகளில் முஸ்லிம்களால் வெற்றிகொள்ளப்பட்ட ஏனைய நாடுகளிளும் இஸ்லாமிய கட்டடக்கலை தாக்கம் செலுத்துவதை இன்று காணலாம்.[1][2] மேலும் தென்கிழக்காசியாவில் இஸ்லாம் பரவிய காலகட்டத்தில் சீன மற்றும் இந்திய கட்டடக்கலையிலும் இது தாக்கம் செலுத்தியது. இஸ்லாமிய எழுத்தணிக்கலை,வடிவியல் மற்றும் இடைவெளியில் வடிவமைக்கப்பட்ட ஆபரணங்களுடன் அலங்காரங்களை அலங்கரித்தல் போன்றன கட்டிடங்களின் வடிவத்தில் தனித்துவமான குணாதிசயங்களை உருவாக்கியது. முக்கியமாக இஸ்லாமிய கட்டிடக்கலைகளை பள்ளிவாசல், கல்லறறை, அரண்மனை மற்றும் கோட்டைகளில் காணலாம்.

துருக்கியிலுள்ள செலிமியே பள்ளிவாசல் குவிமாடத்தின் உள் தோற்றம்(உஸ்மானிய பாணி).

இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள பல கட்டிடங்கள் உலக பாரம்பரிய தளங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன. அவைகளில் அலெப்போவின் சிட்டாடல் போன்ற சில சிரிய உள்நாட்டுப் போரில் சேதம் அடைந்துள்ளன.[3]

இஸ்லாமிய கட்டடக்கலையானது பள்ளிவாசல்கள் போன்ற இஸ்லாமிய கட்டடங்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதல்ல. ஒரு அரண்மனையானாலும் அதன் அளவுகோளல்களுடன் இணங்கிணால் இஸ்லாமிய கட்டடக்கலையில் உள்ளடங்க முடியும். அந்த அளவுகோலை பல புத்தகங்களும் கட்டுரைகளும் விவாதிக்கின்றன. இஸ்லாமிய கட்டடகலையை பாரம்பரிய கட்டடக்கலையாக வரையறுக்க முடியாது. பல சமகால கட்டிட வகைகளும் இதில் உள்ளடங்குகின்றன. இது பற்றி மேலும் விளக்கங்களை (ஹெலென்ப்ரான்டின் "Islamic Architecture" போன்ற) புத்தகங்களில் காணலாம்.

தொடக்கம் தொகு

இஸ்லாம் கி.பி.7 ஆம் நூற்றாண்டு நபிகள் நாயகம் அவர்கள் வாழ்நாளில் தான் தொடங்கியது.[4] அப்போது மசூதி போன்ற கட்டடக்கலைகள் உருவாக்கப்பட்டன. இஸ்லாத்தில் முதலாவது கட்டப்பட்ட பள்ளிவாசலாக குபா பள்ளிவாசல் திகழ்கின்றது. இது 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெருப்பித்து கட்டப்பட்டது.[5]

இன்னொரு பார்வையில், குர்ஆன்[6][7][8] வசனங்களின் படி முஹம்மத் நபியவர்களுக்கு முந்தைய தீர்க்கதரசிகளான நபிமார்களால் இஸ்லாம் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டது.

அவர்களுள் ஒருவரான இப்ராஹிம்[9] நபியவர்களால் அவரது மகன் இஸ்மாயில் அவர்களின் உதவியுடன் மக்காவில் கஃபா (அரபு மொழி: كَـعْـبَـة‎, 'Cube') கட்டப்பட்டது. இது இஸ்லாமிய வரலாற்றில் கட்டப்பட்ட முதலாவது  பள்ளிவாயிலாக [5] திகழ்கிறது.[9][9][10] இப்பள்ளிவாசல் ஒரே நேரத்தில் 8,20,000 பேர் தொழுகை நடத்தக்கூடியளவு விசாலமானதாகும்.

நவீன வடிவமைப்பு தொகு

 
பைஸால் பள்ளிவாசல் இஸ்லாமாபாத், பாகிஸ்தான்
 
Doha, Qatar இலுள்ள இஸ்லாமிய கலை அருங்காட்சியகம்

நவீன கால இஸ்லாமிய கட்டடக்கலை மதசார்பான ஒன்றாக மட்டுமல்லாது சில மாற்றங்களுக்கு உட்பபட்டுள்ளன. நவீன கட்டடக்கலை முறை கடந்த கால முறையிலும் வேறுபட்டது. ஆனால்,பள்ளிவாயல்களின் பல அமைப்புக்கள் அதேவாறே அமைக்கப்படுகின்றன. உதாரணமாக, பள்ளிவாயல் கூரைகளை அலங்கரிக்கும் குவிமாடம், மெலிதான கோபுரம் போன்ற அமைப்பைக் கொண்ட மினாரா, மற்றும் பள்ளிவாயல் உள்ளே அமைக்கபடும் மின்பர் போன்றவை பள்ளிவாயல்களின் தனித்துவ அம்சங்களாகும். அவை இன்னும் பாரம்பரிய வடிவமைப்புக்கு ஒத்ததாகவே அமைக்கப்படுகின்றன.

படிமங்கள் தொகு


மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இஸ்லாமியக்_கட்டிடக்கலை&oldid=3235023" இலிருந்து மீள்விக்கப்பட்டது