தூண்
தூண் என்பது கட்டடக்கலையின் ஓர் அடிப்படைக் கூறாகும். ஆரம்பத்தில் கட்டடங்களைத் தாங்குதற்கென இது அமைக்கப்பட்டது. காலப்போக்கில் அலங்காரங்களிற்காக அமைக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. உலக நாகரிகத்தில் தூண்கள் அனைத்து கட்டடக் கலை மரபுகளிலும் இடம்பெற்றுவிடுகின்ற போதிலும், இந்தியத் தூண்களுக்குத் தனி மரபு உண்டு.[சான்று தேவை]
அசோகன் காலத்தில் தனிக்கற்களாலானதும் எட்டு அடி உயரமுடையதுமான தூண்கள் இவன் காலத்தில் நாற்பது வரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தாங்குதளமாகிய அடிப்பகுதியிலிருந்து மேற்பகுதி வரையில் வரி, கால், பதும், பந்தம், கலசம், தாடி, கும்பம், இதழ், பலகை, போதிகை, உத்திரம், கபோதம் ஆகிய உறுப்புகள் கொண்டு விளங்குகின்றது.