ஐதரோபுளோரோவொலிபீன்கள்

வேதிச் சேர்மம்

ஐதரோபுளோரோவொலிபீன்கள் (Hydrofluoroolefins) என்பவை ஐதரசன், புளோரின் மற்றும் கார்பன் அணுக்கள் சேர்ந்து உருவாகும் வேதிச்சேர்மங்கள் ஆகும். ஆல்க்கேன் வழிச்சேர்மங்கள் ஐதரோபுளோரோகார்பன்கள் எனப்படுவதைப்போல ஆல்க்கீன் வழிச்சேர்மங்கள் ஐதரோபுளோரோவொலிபீன்கள் எனப்படுகின்றன.

1,3,3,3-டெட்ராபுளோரோபுரொப்பீனின் வேதியியல் கட்டமைப்பு

ஐதரோபுளோரோகார்பன்களை விட ஆயிரம் மடங்கு குறைவாக ஐதரோபுளோரோவொலிபீன்கள் புவிவெப்பமாதலுக்கு காரணமாகின்றன [1][2][3] என்பதால் இவற்றை நான்காம் தலைமுறை குளிர்பதனூட்டிகள் என்கிறார்கள். 2,3,3,3-டெட்ராபுளோரோபுரொப்பீனும், 1,3,3,3- டெட்ராபுளோரோபுரொப்பீனும் நடைமுறையில் குளிர்பதனிகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன [1][4]. 1-குளோரோ-3,3,3-முப்புளோரோபுரொப்பீனை பயன்படுத்துவதற்கான திட்டங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன [5]

மேற்கோள்கள்

தொகு

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதரோபுளோரோவொலிபீன்கள்&oldid=4174328" இலிருந்து மீள்விக்கப்பட்டது