ஐத்தரேய பிராமணம்

ஐத்தரேய பிராமணம் (சமக்கிருதம்: ऐतरेय ब्राह्मण) என்பது, இந்தியாவின் மிகப் பழைய புனித நூல்களில் ஒன்றான இருக்கு வேதத்தைச் சேர்ந்ததும், சகல சிந்தனைப் பிரிவுக்கு உரியதுமான பிராமணம் ஆகும். இது மகிதாச ஐத்தரேயா என்பவரால் எழுதப்பட்டது என நம்பும் மரபு ஒன்று உண்டு.[1][2]

நூலாசிரியர்

தொகு

விசயநகரத்தைச் சேர்ந்தவரும் 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த உரையாசிரியருமான சாயனர் என்பவர் இந்நூல் முழுவதும் மகிதாச ஐத்திரேயர் என்பவரால் எழுதப்பட்டது எனக் குறித்துள்ளார்.[3] சாயனர் தான் எழுதிய நூலின் அறிமுகத்தில் "ஐத்திரேயா" என்பது தாய்வழிப் பெயர் எனக் குறிப்பிடுகிறார். இவர் எழுதியபடி, மகிதாசரின் தாயார் பெயர் "ஐத்தரா". சமசுக்கிருத மொழியில் "ஐத்தர" என்னும் சொல்லுக்கு "மற்ற" அல்லது "விலக்கப்பட்ட" என்னும் பொருள் உண்டு. ஐத்தரா முனிவர் ஒருவரின் பல மனைவியர்களுள் ஒருத்தி. முனிவர் மகிதாசரைவிட மற்ற மனைவியர்கள் மூலம் பிறந்த பிள்ளைகளிடமே கூடிய விருப்பம் கொண்டிருந்தார். ஒரு முறை முனிவர் தன்னுடைய மற்ற எல்லா மகன்களையும் தனது மடியில் இருத்திக்கொண்டு மகிதாசரைப் புறக்கணித்துவிட்டார். இதையிட்டு மகிதாசரின் கண்ணில் கண்ணீர் வருவதைக் கண்ட இத்தாரா, தனது குலதெய்வமான பூமித் தாயை வணங்கி முறையிட்டாள். பூமித்தாய் அவர்கள் முன் தோன்றி ஐத்தரேய பிராமணத்தில் அடங்கியுள்ள அறிவை மகிதாசருக்கு வழங்கினாள்.[4]

ஆர்தர் பெரிடேல் கீத்து, மாக்சு முல்லர் போன்ற பிற்கால அறிஞர்கள் இந்தக் கதையில் உண்மை இல்லை என்கின்றனர்.[4] சாந்தோக்கிய உபநிடதம் (3.16.7), ஐத்தரேய ஆரண்யகம் (2.1.7, 3.8) உள்ளிட்ட, சாயனருக்கு முந்திய பிற நூல்கள் சிலவற்றிலும் மகிதாசர் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. ஆனால், மேற்படி நூல்கள் எதிலும் சாயனர் கூறிய கதை இல்லை.[4] ஐத்தரேய ஆரண்யகம், ஐயத்துக்கு இடமின்றி ஒரு தொகுப்பு நூலே. எனவே ஐத்தரேய பிராமணமும் பல ஆசிரியர்களால் எழுதப்பட்டதாக இருக்கக்கூடும். இப்பிராமணத்தின் இறுதித் தொகுப்பை மகிதாசர் செய்திருக்கக்கூடும் என்றும், ஆனாலும் அதையும் முடிவாகச் சொல்லமுடியாது என்றும் கீத்து கருதுகிறார்.[3]

நூலின் காலம்

தொகு

ஐத்தரேய பிராமணத்தின் காலத்தை பொகாமு 1000க்கும் பொகாமு 500க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பல்வேறாகக் கணித்துள்ளனர்.[5] அவற்றுட் சில வருமாறு:

  • ஜான் என். பிரேமர் - பொகாமு 800[6]
  • ஜான் ஜி. ஆர். போர்லோங் - பொகாமு 700 அல்லது அதற்கு முன்[7]
  • பிராங்கிளின் சவுத்வர்த் - பொகாமு 7ம் நூற்றாண்டு[8]
  • எச். எச். வில்சன் - பொகாமு 6ம் நூற்றாண்டு[9]
  • ஈ. ஜே. ராப்சன் - பொகாமு 500 (நூலின் பிந்திய பகுதிகள்)[10]

உள்ளடக்கம்

தொகு

ஐத்தரேய பிராமணம், பஞ்சிகங்கள் எனப்படும் எட்டுப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பஞ்சிகமும் ஐந்து அத்தியாயங்களிக் கொண்டது. ஐத்தரேய பிராமணத்தின் உள்ளடக்க அமைப்பு வருமாறு:

  • பஞ்சிகம் 1
    • அத்தியாயம் 1: புனிதப்படுத்தல் சடங்குகள்
    • அத்தியாயம் 2: அறிமுக வேள்வி
    • அத்தியாயம் 3: சோமபானம் வாங்குதலும் கொண்டுவருதலும்
    • அத்தியாயம் 4: பிரவர்கியம்
    • அத்தியாயம் 5: தீ, சோமம், படையல்கள் ஆகியவற்றை உயர்ந்த பலிபீடத்துக்குக் கொண்டு செல்லுதல்
  • பஞ்சிகம் 2
    • அத்தியாயம் 1: விலங்குப் பலி
    • அத்தியாயம் 2: விலங்குப் பலியும் காலைப் பாசுரங்களும்
    • அத்தியாயம் 3: "அபோனப்திரிய" மற்றும் பிற சடங்குகள்
    • அத்தியாயம் 4: இந்திரனுக்கும் வாயுவுக்கும், மித்திரனுக்கும் வருணனுக்கும், அசுவினுக்குமான பாகங்கள்
    • அத்தியாயம் 5: அஜ்ய சாத்திரம்
  • பஞ்சிகம் 3
    • அத்தியாயம் 1:
    • அத்தியாயம் 2: மாருத்வாத்தியவும், நிஸ்கேவல்ய சாத்திரமும்
    • அத்தியாயம் 3: வைசுவதேவரும், அக்கினிமாருதவும்
    • அத்தியாயம் 4: "அக்கினிஸ்தோமம்" தொடர்பில் பொதுவாகக் கவனிக்கவேண்டியவை
    • அத்தியாயம் 5: வேள்வி தொடர்பான சில விவரங்கள்
  • பஞ்சிகம் 4
    • அத்தியாயம் 1: சோடசின்னும் ஆதிரத வேள்விகளும்
    • அத்தியாயம் 2: அசுவின சாத்திரமும் கவம் ஆயனவும்
    • அத்தியாயம் 3: சதகாசும் விசுவந்தும்
    • அத்தியாயம் 4: "துவாதசுகக" சடங்கு
    • அத்தியாயம் 5: "துவாதசுகக"வின் முதல் இரு நாட்கள்
  • பஞ்சிகம் 5
    • அத்தியாயம் 1: "துவாதசுகக"வின் மூன்றாம் நான்காம் நாட்கள்
    • அத்தியாயம் 2: "துவாதசுகக"வின் ஐந்தாம் ஆறாம்நாட்கள்
    • அத்தியாயம் 3: "துவாதசுகக"வின் ஏழாம் எட்டாம் நாட்கள்
    • அத்தியாயம் 4: "துவாதசுகக"வின் ஒன்பதாம் பத்தாம் நாட்கள்
    • அத்தியாயம் 5: அக்கினிஹோத்திரமும் பிராமண குருவும்
  • பஞ்சிகம் 6
    • அத்தியாயம் 1:
    • அத்தியாயம் 2:
    • அத்தியாயம் 3:
    • அத்தியாயம் 4:
    • அத்தியாயம் 5:
  • பஞ்சிகம் 7
  • பஞ்சிகம் 8

மேற்கோள்கள்

தொகு
  1. Keith, Arthur Berriedale (1998) [1920]. Rigveda Brahmanas: the Aitareya and Kauṣītaki Brāhmaṇas of the Rigveda. Delhi: Motilal Banarsidass. p. 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-1359-6.
  2. Roman alphabet transliteration, TITUS
  3. 3.0 3.1 Arthur Berriedale Keith (1920). Rigveda Brahmanas: The Aitareya and Kausitaki Brahmanas of the Rigveda. Motilal Banarsidass. pp. 28–29. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1359-5.
  4. 4.0 4.1 4.2 Friedrich Max Müller (1860). A History of Ancient Sanskrit Literature. Williams and Norgate. pp. 336–337.
  5. N.R.V. Prasad, ed. (1995). The Andhra Pradesh Journal of Archaeology. Director of Archaeology and Museums, Government of Andhra Pradesh. p. 3.
  6. Jan N. Bremmer (2007). The Strange World of Human Sacrifice. Peeters Publishers. p. 158. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-429-1843-6.
  7. John G. R. Forlong (1906). Encyclopedia of Religions. pp. 76–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-60520-489-5.
  8. Franklin Southworth (2 August 2004). Linguistic Archaeology of South Asia. Routledge. p. 97. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-31776-9.
  9. Monier Monier-Williams (1875). Indian Wisdom. W.H. Allen. p. 28.
  10. E.J. Rapson (1995). Ancient India: From the Earliest Times to the First Century A.D. Asian Educational Services. p. 159. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-206-1107-8.

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐத்தரேய_பிராமணம்&oldid=3016486" இலிருந்து மீள்விக்கப்பட்டது