ஐந்தருவியாறு

ஐந்தருவியாறு என்பது தென்காசி நகராட்சியில் உற்பத்தியாகும் சிற்றாறு என்னும் ஆற்றின் துணையாறு ஆகும்.[1] ஐந்தருவியாறு மூலம் தென்காசி நகராட்சியிலுள்ள ஹெக்டேர்களுக்கு 293.4 ஹெக்டேர்களுக்கு பாசன வசதி கிடைக்கிறது. இது சிற்றாற்றுடன் கசமோட்சபுரம் என்னும் ஊரில் இணைகிறது. மேலும் இதன் மூலமே ஐந்தருவியும் உற்பத்தி ஆகிறது. இது ஒரு அணைக்கட்டையும் கொண்டுள்ளது.

ஐந்தருவி

பாசனம்

தொகு

மொத்தம் சிற்றாறிற்கு 5 முதனிலை துணையாறுகளும் 3 இரண்டாம் நிலை துணையாறுகளும் ஒரு மூன்றாம் நிலை துணையாறும் உள்ளன. அவற்றின் மூலம் தென்காசி நகராட்சி முழுதும் பாசன வசதி பெறுகிறது. அவற்றின் விவரம்,

நதி மூல நதி/மலை அணைக்கட்டுகள் (தேக்கங்களின்) எண்ணிக்கை பாசன நில அளவு (ஹெக்டேர்கள்)
சிற்றாறு குற்றாலம் 17 8903.27
ஐந்தருவி ஆறு சிற்றாறு 1 293.4
அரிகர நதி சிற்றாறு 7 445.10
குண்டாறு அரிகர நதி 7 (1) 465.39
மொட்டையாறு குண்டாறு 1 (1) 141.64
அழுதகன்னியாறு சிற்றாறு 8 827.47
அனுமன் நதி சிற்றாறு 14 4046.94
கருப்பாநதி அனுமன் நதி 6 (1) 3844.59
உப்போடை சிற்றாறு 2 445.16

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2012-04-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐந்தருவியாறு&oldid=3673236" இலிருந்து மீள்விக்கப்பட்டது