ஐந்தருவியாறு
(ஐந்தருவி ஆறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஐந்தருவியாறு என்பது தென்காசி நகராட்சியில் உற்பத்தியாகும் சிற்றாறு என்னும் ஆற்றின் துணையாறு ஆகும்.[1] ஐந்தருவியாறு மூலம் தென்காசி நகராட்சியிலுள்ள ஹெக்டேர்களுக்கு 293.4 ஹெக்டேர்களுக்கு பாசன வசதி கிடைக்கிறது. இது சிற்றாற்றுடன் கசமோட்சபுரம் என்னும் ஊரில் இணைகிறது. மேலும் இதன் மூலமே ஐந்தருவியும் உற்பத்தி ஆகிறது. இது ஒரு அணைக்கட்டையும் கொண்டுள்ளது.
பாசனம்
தொகுமொத்தம் சிற்றாறிற்கு 5 முதனிலை துணையாறுகளும் 3 இரண்டாம் நிலை துணையாறுகளும் ஒரு மூன்றாம் நிலை துணையாறும் உள்ளன. அவற்றின் மூலம் தென்காசி நகராட்சி முழுதும் பாசன வசதி பெறுகிறது. அவற்றின் விவரம்,
நதி | மூல நதி/மலை | அணைக்கட்டுகள் (தேக்கங்களின்) எண்ணிக்கை | பாசன நில அளவு (ஹெக்டேர்கள்) |
---|---|---|---|
சிற்றாறு | குற்றாலம் | 17 | 8903.27 |
ஐந்தருவி ஆறு | சிற்றாறு | 1 | 293.4 |
அரிகர நதி | சிற்றாறு | 7 | 445.10 |
குண்டாறு | அரிகர நதி | 7 (1) | 465.39 |
மொட்டையாறு | குண்டாறு | 1 (1) | 141.64 |
அழுதகன்னியாறு | சிற்றாறு | 8 | 827.47 |
அனுமன் நதி | சிற்றாறு | 14 | 4046.94 |
கருப்பாநதி | அனுமன் நதி | 6 (1) | 3844.59 |
உப்போடை | சிற்றாறு | 2 | 445.16 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2012-04-05.