ஐந்தாம் வேற்றுமை

ஐந்தாம் வேற்றுமை என்பது இப்பொருள் இத்தன்மையானது என்னும் பொருண்மையை உணர்த்துவது ஆகும். ஐந்தாம் வேற்றுமை உருபு இன், இல் ஆகும். இவ்வுருபு தன்னை ஏற்ற பெயர்ச் சொல்லின் பொருளை நான்கு வகையாக வேறுபடுத்தும்

ஐந்தாம் வேற்றுமை உணர்த்தும் பொருள்கள் தொகு

சான்று

  1. நீங்கல்
மலையின் வீழருவி

2. ஒப்பு

3. எல்லை

  • மதுரையின் வடக்கே தில்லை
  • குடந்தையின் கிழக்கு புகார்.

4. ஏது

சொல்லுருபுகள் தொகு

நீக்கப் பொருளிலும் எல்லைப் பொருளிலும் இல், இன் என்ற உருபுகளின் மேல் , நின்று, இருந்து என்பவை சில இடங்களில் சொல்லுருபுகளாய் வரும் சான்று
நின்று

  • ஊரினின்று நீங்கினான்
  • ஊரிலிருந்து போனான் --- நீக்கல் பொருள்

இருந்து

  • காட்டினின்று ஊர் காத தூரம்
  • வீட்டிலிருந்து ஐந்து காதம் -- எல்லைப் பொருள்

நூற்பா-1 தொகு

" ஐந்தாகுவதே
இன்னெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
இதனின் இற்றிது என்னும் அறிவே" [1]

நூற்பா-2 தொகு

" ஐந்தாவது அதன் உருபே இன்னும் இல்லும்
நீங்கல் ஒப்பல் எல்லை ஏதுப் பொருளே" -- [2]

குறிப்புகள் தொகு

  1. தொல்காப்பியம், சொல்லதிகாரம்.நூற்பா 77
  2. நன்னூல், வேற்றுமையியல். 299

மேற்கோள் நூல்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐந்தாம்_வேற்றுமை&oldid=3274499" இலிருந்து மீள்விக்கப்பட்டது