ஐனா வில்பர்
ஐனா ஜினோவிவ்னா வில்பர் (Aina Zinovievna Vilberh[a] (உக்ரைனியன்: Айна Зіновіївна Вільберг; உருசியம்: Айна Зиновьевна Вильберг; பிறப்பு 10, சனவரி, 1985) என்பவர் ஒரு உக்ரேனிய பாடகி, பாடலாசிரியர், குரல் ஆசிரியர், நடிகை ஆவார்.
ஐனா வில்பர் | |
---|---|
2021 இல் ஐனா வில்பர் | |
பிறப்பு | சனவரி 10, 1985 ககோவ்கா, உக்ரைன் சோவியத் சோசலிச குடியரது, சோவியத் ஒன்றியம் |
குடியுரிமை |
|
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2000–தற்போது |
இசை வாழ்க்கை | |
இசை வடிவங்கள் | |
இசைக்கருவி(கள்) |
|
வெளியீட்டு நிறுவனங்கள் |
|
கையொப்பம் |
வாழ்க்கையும் தொழிலும்
தொகு1985-2000: துவக்ககால வாழ்க்கை
தொகுஐனா வில்பர் 1985 சனவரி 10 அன்று ககோவ்காவில் பிறந்தார். இவர் 2002 முதல் 2006 வரை கீவ் அரசு இசைக்கல்லூரியில் (தற்போது ஆர். கிளியர் கிவி இசைக் கல்வி நிறுவனம் என்று வழங்கப்படுகிறது) கல்லூரியில் பயின்றார்.[1] வில்பெர்த் பாரம்பரிய இசை முதல் நியூ மெட்டல் வரை என பல்வேறு வகையான இசைக் குழுக்களில் பங்கேற்றார்.[1] இவர் பேப்ரிகா ஜிரோக், ஷௌமாஸ்ட்கூன் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் குரல் பயிற்சியாளராக பணிபுரிந்துள்ளார். [2] 2013 இல் பாகுவில் பாடகர்களுக்கான போட்டி நிகழ்சியான யூரோவிசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களைத் தயார்படுத்தும் பணியில் ஈடுப்பட்டார். ஸ்வயடோஸ்லாவ் வகார்ச்சுக், அனி லோராக் ஆகிய குழுக்களின் பங்கேற்பாளர்களுடன் இவர் தீவிரமாக பணியாற்றிய கடைசி தொலைக்காட்சி நிகழ்ச்சிளில் ஒன்று உக்ரைனின் குரல் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும்.[3]
2000-2004: பஸ்ஸா-ஆர்
தொகு2000 ஆம் ஆண்டு, ஐனா வில்பர் Звуковой барьер (Zvukovoi barer) என்ற இசைக் குழுவில் சேர்ந்தார். பின்னர், இசைக்குழு அதன் பெயரை பஸ்ஸா-ஆர் என மாற்றியது. அக்குழுவில் 2002 வரை இவர் இருந்தார். இசைக்குழு உறுப்பினர்களின் கூற்றுப்படி, இவர்களின் இசை " கடின ராக்கை விட இலகுவானது பாப் ராக்கைவிட கனமானது".[4]
2004 மே முதல் நாளன்று ககோவ்காவில், உக்ரைன் குடியரசு தலைவரான லியோனிட் குச்மா ஆதரவின் கீழ் உக்ரைனின் கலாச்சார மற்றும் கலை அமைச்சின் ஆதரவுடன், 13 வது சர்வதேசவிழா தவ்ரிஸ்கி இஹ்ர் நடைபெற்றது.[5][6] அதில் பஸ்ஸா-ஆர் குழுவும் கலந்துகொண்டது. இசைக்கலைஞர்கள் உக்ரேனிய மொழியில் ஐந்து பாடல்களை நிகழ்த்தினார்கள்.[6]
2004-2006: எட்வாஸ் அண்டர்ஸ்
தொகு2004 முதல், வில்பெர்த் மாற்று இசைக் குழுவான எட்வாஸ் அண்டர்சில் உறுப்பினராக இவர் இருந்து வருகிறார்.
இந்த இசைக் குழுவானது இரண்டு ஆண்டுகளில், உக்ரைனின் கிட்டத்தட்ட அனைத்து பிராந்திய மையங்களிலும் இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளது. முக்கிய விழா சாதனைகளில் ஒன்றாக தாராஸ் புல்பா ராக் விழாவில் முதல் பரிசு பெற்றது.[7] அத்துடன் 2006 ஆண்டு குளோபல் பேட் ஆஃப் தி பேண்ட்ஸ் இசை விழா போட்டியில் உக்ரைன் சிறந்த மாற்று இசைக்குழு என்ற பட்டத்தை இந்த இசைக்குழு பெற்றது.[8]
இந்த இசைக் குழுவின் முதல் இசைக் கோப்பின் பதிவு 2006 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தொடங்கியது, அந்த ஆண்டு அக்டோபரில் வெளியீட திட்டமிடப்பட்டது.[9] இசைக்குழுவின் சுறுசுறுப்பான கச்சேரி காலம் முடிந்த பிறகு, ஐனா இசைக்குழுவை விட்டு வெளியேறினார்.[10]
குறிப்புகள்
தொகு- ↑ உக்ரைனியன்: Айна Зіновіївна Вільберг.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Кто есть кто в группе «ВИА Гра» Дмитрия Костюка". Archived from the original on 18 May 2015. பார்க்கப்பட்ட நாள் 14 January 2014.
- ↑ "Онлайн-конференция с Надеждой Мейхер". 15 November 2016. Archived from the original on 16 November 2016. பார்க்கப்பட்ட நாள் 15 November 2016.
- ↑ "Биография Айны Вильберг". Archived from the original on 28 August 2016. பார்க்கப்பட்ட நாள் 11 February 2016.
- ↑ Новый фаворит 2004
- ↑ "XIII Международный фестиваль "Таврийские Игры"". Archived from the original on 10 June 2016. பார்க்கப்பட்ட நாள் 24 May 2004.
- ↑ 6.0 6.1 "В Каховке стартовали "Таврийские игры"". Archived from the original on 12 August 2016. பார்க்கப்பட்ட நாள் 2 May 2004.
- ↑ "Победители фестиваля "Тарас Бульба-2006"". Archived from the original on 21 December 2016. பார்க்கப்பட்ட நாள் 11 February 2016.
- ↑ "Украинцы в декабре взорвут Лондон". Archived from the original on 17 June 2016. பார்க்கப்பட்ட நாள் 24 October 2006.
- ↑ "Etwas Unders начали запись дебютного альбома". Archived from the original on February 15, 2016. பார்க்கப்பட்ட நாள் 28 July 2006.
- ↑ "Елена прекратила своё сотрудничество с группой". Archived from the original on 20 December 2018. பார்க்கப்பட்ட நாள் 16 January 2007.