ஐன்சிலே கால்வாய்
ஐன்சிலே கால்வாய் (Ainsley Canal) என்பது இந்தியாவில் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அமைந்துள்ள ஒரு குறுகிய கால்வாய் ஆகும். இந்தக் கால்வாய் வில்லிவாக்கம் தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடங்கி ஒட்டேரி நீரோடையில் கலக்கிறது. தொடருந்து பணியாளர்கள் குடியிருப்புகள் மற்றும் அயனாவரம் அருகே உள்ள ஒருங்கிணைந்த தொடருந்து பெட்டி தொழிற்சாலையுடன் இணைக்கிறது. இது சுமார் 3 கிலோமீட்டர் (2 மைல்) நீளம் வரை ஓடுகிறது.
ஐன்சிலே கால்வாய் மிகவும் மாசுபட்டுள்ளது. பில்கிங்டன் சாலை, வசந்தத் தோட்டம், அப்பத்துரை பிரதான சாலை, பாளையாகரன் தெரு மற்றும் மதுரை தெருவில் வசிப்பவர்கள் கழிவுகளை இக்கால்வாயில் கொட்டுகின்றனர். 2006ஆம் ஆண்டில் தொடருந்து நிர்வாகம் இக்கால்வாயைத் தூர்வாரிய போதிலும் கால்வாயின் நிலை மேம்படவில்லை.[1][2]