ஐபீரிய வாயில்கள்

ஐபீரிய வாயில்கள் (Iberian Gates) என்பது வரலாற்று சியார்சியாவின் மேற்கு திசையில் , கிரேக்க-உரோமானிய புவியியலில் மெசிக் மலைகள் என்று அழைக்கப்படும் மெசிட் மலைகளின் (உசுந்தெரே மலை ) பீடபூமியில் அமைந்துள்ளது. சியார்சியாவின் புவியியலாளர் வகுஷ்டி படோனிஷ்விலியின், 18 ஆம் நூற்றாண்டின் சார்சியா இராச்சியத்தைப் பற்றிய ஒரு நூலில் இந்த இடம் குர்ஜி-போகாசி என பதிவு செய்யப்பட்டுள்ளது. [1]

ஐபீரிய வாயில்கள் is located in காக்கசஸ் மலைத்தொடர்
Iberian Gate
Iberian Gate
நீல புள்ளி = ஐபீரிய வாயிலின் தோராயமான இடம்

வரலாற்றில்

தொகு

அலெக்சந்தரின் ஐபீரியா மீதான படையெடுப்பு, சார்சிய வரலாற்று பாரம்பரியத்தால் மட்டுமல்ல, மூத்த பிளினி (4.10.39) மற்றும் கயஸ் ஜூலியஸ் சோலினஸ் (9.19) ஆகியோரால் நினைவுகூரப்பட்டது. ஐபீரியாவில் சில மாசிடோனிய தலையீட்டின் நினைவகமாகத் தோன்றுகிறது. கிமு 323 இல் அலெக்சாந்தர் தங்க சுரங்கங்களைத் தேடி ஐபீரியாவின் எல்லைக்கு அனுப்பியதாக இசுட்ராபோ (11.14.9) குறிப்பிட்டுள்ளார். [2] அசோய் (அசோ) என்பவர் ஐபீரியா இராச்சியத்தை நிறுவியதாக கூறப்படுகிறது. அசோ ஐபீரியா தேசத்தில் உள்ள ஐபீரியாவின் வாயில்களை மட்டும் விட்டுவிட்டு அனைத்து கோட்டைகளையும் இடித்துத் தள்ளி, அவற்றை வீரர்களால் நிரப்பினார். [3] கிமு 4-3 ஆம் நூற்றாண்டுகளில் இசுட்ராபோ குறிப்பிட்டபடி இப்பகுதி ஐபீரிய இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. Vakhushti Prince (Bagrationi). Geography Georgia., 1904, Tiflis.
  2. Toumanoff, p. 9
  3. Licini, Patrizia (2017). Surveying Georgia’s Past. p. 136.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐபீரிய_வாயில்கள்&oldid=3095925" இலிருந்து மீள்விக்கப்பட்டது