ஐயூர் என்பது சங்ககாலத்தில் சிறப்புடன் விளங்கிய ஊர்களில் ஒன்று ஆகும். இவ்வூரில் வாழ்ந்த புலவர் ஐயூர் முடவனார். ஐவர்மலை என இக்காலத்தில் மருவி வழங்கப்படும் ஊரே இந்த ஐயூர் எனக் கொள்ளவது பொருத்தமாக அமைகிறது. ஐயூரில் வாழ்ந்த புலவர் ஐயூர் முடவனார் கால் முடம் பெற்றிருந்த புலவர். இவர் உறையூர் வேந்தன் [[சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை|கிள்ளிவளவனைக் காணச் சென்றார். செல்லும் வழியில் தாமான் தோன்றிக்கோனை அவனது தான்தோன்றி மலையில் கண்டு தன் வண்டியை இழுத்துச் செல்ல காளைமாடு ஒன்று வேண்டும் என்று கேட்டார், அவன் மாட்டுடன் தேர்வண்டி ஒன்றை வழங்கியதோடு பெரிய ஆனிரைக் கூட்டத்தையே வழங்கினான். [1] ஐயூர் புலவர் தான்தோன்றி மலை வழியாக உறையூர் செல்லும் வழியை எண்ணும்மோது ஐயூர் என்பது இக்கால ஐயர் மலை எனல் வரலாற்றுக் கோணத்தில் சரியாக இருக்கும்.

அடிக்குறிப்பு

தொகு
  1. புறநானூறு 399
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐயூர்&oldid=2544440" இலிருந்து மீள்விக்கப்பட்டது