ஐரிய விக்கிப்பீடியா
ஐரிய விக்கிப்பீடியா (Irish Wikipedia) என்பது கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவின் ஐரிய மொழி பதிப்பாகும். 2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஐரிய விக்கிப்பீடியா செயல்படுகிறது. 2004 ஆம் ஆண்டு சனவரி மாதம் ஐரிசு விக்கிப்பீடியாவில் முதலாவது கட்டுரை எழுதப்பட்டது. விக்கிமீடியா அறக்கட்டளையின் கீழ் காப்ரியல் பீச்சாம் என்பவர் ஐரிய மொழி விக்கிப்பீடியாவை தொடங்கினார்.[1] 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஐரிய மொழியில் 1600 கட்டுரைகள் எழுதப்பட்டன. பகுதி நேரமாகவும் முழுநேரமாகவும் 173 பயனர்கள் இக்கட்டுரைகளை எழுதினர். 2007 ஆம் ஆண்டு மார்ச்சு மாத நிலவரப்படி ஐரிய மொழியில் 7000 கட்டுரைகள் எழுதப்பட்டன. 20 தீவிர விக்கிப்பீடியா பயனர்கள் இக்கட்டுரைகளை எழுதினர்.[1][2] 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஐரிய மொழியில் கட்டுரைகளின் எண்ணிக்கை 28,000 என்ற அளவை எட்டியது. இதனால் உலக விக்கிப்பீடியா தரவரிசையில் ஐரிய விக்கிப்பீடியா 85 ஆவது பெரிய விக்கிப்பீடியா என்ற நிலையை அடைந்தது.
வலைத்தள வகை | இணையதள கலைக்களஞ்சியத் திட்டம் |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | ஐரிய மொழி |
உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
வணிக நோக்கம் | இல்லை |
பதிவு செய்தல் | கட்டாயமல்ல |
உரலி | ga.wikipedia.org |
தத்துவம்,[3] மரபியல்,[4] பழங்குடியினர் தொடர்பான கட்டுரைகள்[5] மற்றும் கடல்சார் சொற்களஞ்சியம்[6] போன்ற பல்வேறு தலைப்புகள் உட்பட பலவிதமான பாடப் பொருள்கள் தற்போது ஐரிய விக்கிப்பீடியாவின் உள்ளடக்கமாக உள்ளன. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஐரிய கலைக்களஞ்சியத்தின் நிர்வாகக் குழுவினரிடம் அனுமதியுடன் படைப்புகள் நேரடியாக ஐரிய விக்கிப்பீடியாவில் பதிவேற்றப்படுகின்றன.[7]
2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஐரிய மொழியில் கட்டுரைகளின் எண்ணிக்கை 28,000 என்ற அளவை எட்டியது. இதனால் உலக விக்கிப்பீடியா தரவரிசையில் ஐரிய விக்கிப்பீடியா 85 ஆவது பெரிய விக்கிப்பீடியா என்ற நிலையை அடைந்தது.
விசிபீட் என்ற பெயரால் அறியப்படும் ஐரிய மொழி விக்கிப்பீடியா அந்நாட்டு ஊடகங்களின் ஆதரவையும் பெற்றுள்ளது.[1][8][9] கற்றலை மீண்டும் கற்றல் தொழில்நுட்பத்திற்குள் கொண்டுவருவது குறித்த தனது ஆய்வறிக்கையில் டப்ளின் நகர பல்கலைக்கழகத்தின் பாரி மெக்முலின், ஐரிய விக்கிப்பீடியா ஒருபோதும் உலகின் மிகப் பரவலான மொழிகளின் விக்கிப்பீடியாக்களைப் போன்ற பல கட்டுரைகளைக் கொண்டிருக்க வாய்ப்பில்லை என்றாலும் ஒரு பயனுள்ள அறிவு வளமாகும் என்று பரிந்துரைத்தார்.[10] சில குறிப்பிட்ட தலைப்புப் பகுதிகள் பற்றிய அறிவைத் தேடும்போது ஐரிய விக்கிப்பீடியா ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் உள்ள விக்கிபீடியாக்களை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் உணர்ந்தார். ஏனெனில் கட்டுரைகளின் பரிணாம வளர்ச்சியின் தன்மை எந்தவொரு மொழியிலும் அக்கட்டுரைகளின் முதன்மை அல்லது உறுதியான விக்கிப்பீடியா கட்டுரைகளைக் கொண்டிருக்க வழிவகுக்கும் என்பது அதற்கான காரணமாகும்.[10]
பிற கல்வி ஆதாரங்கள் ஐரிய மொழி விக்கிப்பீடியா தளத்தின் கல்வி மதிப்பை வலியுறுத்தியுள்ளன. மூன்றாம் நிலை கல்வியல் கருவியாக ஐரிய விக்கிப்பீடியாவின் பங்கு விக்கிமீடியா பயன்பாட்டின் பின்னணியில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.[11] மேற்கு அயர்லாந்திலுள்ள கால்வே தேசிய பல்கலைக்கழகத்தின் கல்விச் செயல்திட்டங்கள் ஐரிய விக்கிப்பீடியாவை ஆதரிக்கின்றன.[12]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Liam Upton. "Beo! - Wikipedia: tionscadal an-fhiúntach ar fad". Beo.ie. பார்க்கப்பட்ட நாள் 2011-11-03.
- ↑ Willie Dillon (2007-03-09). "Wikipedia Insanica - Features, Unsorted". Independent.ie. http://www.independent.ie/unsorted/features/wikipedia-insanica-48940.html. பார்த்த நாள்: 2011-11-03.
- ↑ Fealsúnacht#.C3.93n 16.C3.BA haois go dt.C3.AD an 19.C3.BA haois
- ↑ Géineolaíocht
- ↑ Curach choirte na hAstráile
- ↑ Téarmaí seoltóireachta
- ↑ Hussey, Matthew (2011). Fréamh an Eolais. Baile Átha Cliath: Coiscéim.
- ↑ Mary Beth Taylor. "Beo! - Wikipedia ag fás de shíor". Beo.ie. பார்க்கப்பட்ட நாள் 2011-11-03.
- ↑ Diarmaid Mac Mathúna. "Beo! - Suíomhanna den chéad scoth". Beo.ie. பார்க்கப்பட்ட நாள் 2011-11-03.
- ↑ 10.0 10.1 "Putting the learning back into learning technology". Aishe.org. Archived from the original on 2016-04-21. பார்க்கப்பட்ட நாள் 2011-11-03.
- ↑ "Immersion Education - General Teaching Council for Northern Ireland Repository". Gtcni.openrepository.com. 2007-12-14. Archived from the original on 2012-12-06. பார்க்கப்பட்ட நாள் 2011-11-03.
- ↑ Sharon Flynn. "Academic Writing and Wikipedia". Research.ie. பார்க்கப்பட்ட நாள் 2016-05-14.
வெளியிணைப்புகள்
தொகு- Vicipéid (in ஐரிய மொழி)
- Irish Wikipedia mobile version (not fully supported) (in ஐரிய மொழி)
- Statistics for Irish Wikipedia by Erik Zachte