ஐரீன் பெர்னாண்டஸ்

மலேசிய மனித உரிமை செயற்பாட்டாளர்

ஐரீன் பெர்னாண்டஸ் (பிறப்பு: 18 ஏப்ரல் 1946; இறப்பு: 31 மார்ச் 2014); (மலாய்: Irene Fernandez; ஆங்கிலம்: Irene Fernandez; சீனம்: 艾琳·费尔南德斯) என்பவர் மலேசிய மனித உரிமை செயற்பாட்டாளர்; அரசியல்வாதி.

ஐரீன் பெர்னாண்டஸ்
2008-ஆம் ஆண்டில் ஐரீன் பெர்னாண்டஸ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
Irene Fernandez

(1946-04-18)18 ஏப்ரல் 1946
மலேசியா
இறப்பு31 மார்ச்சு 2014(2014-03-31) (அகவை 67)
பெட்டாலிங் ஜெயா, சிலாங்கூர், மலேசியா
குடியுரிமைமலேசியர்
அரசியல் கட்சிமக்கள் நீதிக் கட்சி
வாழிடம்மலேசியா
வேலைமனித உரிமை செயற்பாட்டாளர்
அரசியல்வாதி
விருதுகள்ரைட் வாழ்வாதார விருது

இவர் மக்கள் நீதிக் கட்சி (மலாய்: Parti Keadilan Rakyat; ஆங்கில மொழி: People's Justice Party) உச்ச மன்றத்தின் உறுப்பினராகவும்;[1] அரசு சாரா நிறுவனமான தெனாகானித்தாவின் (Tenaganita) இயக்குநராகவும் இருந்தவர்.

மலேசியாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அகதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக தெனாகானித்தா அரசு சாரா நிறுவனம் உருவாக்கப் பட்டது.[2]

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராகப் போராடியவர். புலம்பெயர் ஏழைத் தொழிலாளர்கள் துஷ்பிரயோகம் செய்யப் படுவதை நிறுத்துவதற்காகவும் போராடியவர்.

பொது தொகு

1995-ஆம் ஆண்டில், தடுப்பு மையங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துஷ்பிரயோகம், சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற நிலைமைகள் எனும் தலைப்பில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகள் குறித்து ஐரீன் பெர்னாண்டஸ் ஓர் அறிக்கையை வெளியிட்டார்.[3]

சிடீவன் கான் (Steven Gan) எனும் மலேசியப் பத்திரிகையாளரும்; மற்றும் தி சன் (The Sun) எனும் பத்திரிகையின் செய்தியாளர்களும்; ஐரீன் பெர்னாண்டஸுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அந்த அறிக்கையின் ஒரு பகுதி வெளியிடப்பட்டது.

தடுப்பு முகாமில் கைதிகள் இறப்பு தொகு

டைபாய்டு எனும் குடற்காய்ச்சல் மற்றும் பெரிபெரி நோய்களினால் செமினி குடியேற்ற தடுப்பு முகாமில் 59 கைதிகள் இறந்தனர் என்பதற்கான சான்றுகளை தி சன் பத்திரிகையின் செய்தியாளர்கள் முன் வைத்தனர். அதிமாகப் பாதிக்கப் பட்டவர்கள் வங்காளதேசத் தொழிலாளர்கள் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.[4][5]

அந்த அறிக்கையைப் பத்திரிகையில் வெளியிடுவதற்கு தி சன் பத்திரிகையின் ஆசிரியர்களால் மறுக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த அறிக்கையை தி சன் பத்திரிகையின் செய்தியாளர்கள் ஐரீன் பெர்னாண்டஸிடம் ஒப்படைத்தனர்.[6]

ஐரீன் பெர்னாண்டஸ் கைது தொகு

1996-இல் ஐரீன் பெர்னாண்டஸ் கைது செய்யப் பட்டார். ’தவறான செய்திகளை வெளியிட்டதாக' குற்றம் சாட்டப் பட்டார்.[6]

ஏழு ஆண்டுகள் விசாரணை நடைபெற்றது. அதன் பிறகு 2003-ஆம் ஆண்டில் ஐரீன் பெர்னாண்டஸ் ஒருகுற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, ஓர் ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் மேல்முறையீடு செய்தார். அதனால் பிணையில் (ஜாமீன்) விடுவிக்கப் பட்டார்.

ஆனாலும் அவரின் கடவுச் சீட்டு நீதிமன்றத்திடம் ஒப்ப்டைக்கப் பட்டது. 2004-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில், ஒரு நாடாளுமன்ற வேட்பாளராக நியமிக்கப் படுவதில் இருந்து தடுக்கப் பட்டார்.

ரைட் வாழ்வாதார விருது தொகு

2005-ஆம் ஆண்டில், அவருக்கு ரைட் வாழ்வாதார விருது வழங்கப்பட்டது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள்; புலம்பெயர் ஏழைத் தொழிலாளர்கள் மீதான துஷ்பிரயோகங்கள்; இவற்றைத் தடுப்பதற்கான அவரின் துணிச்சல் மிக்க பணிக்காக அந்த விருது வழங்கப் பட்டது.

ஐரீன் பெர்னாண்டஸின் மேல்முறையீடு, கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் 2008 அக்டோபர் 28-ஆம் தேதி மீண்டும் தொடங்கியது.

நீதிபதி முகமது அபாண்டி அலி தொகு

2008 நவம்பர் 26-ஆம் தேதி, நீதிபதி முகமது அபாண்டி அலி, ஐரீன் பெர்னாண்டஸின் தண்டனையை ரத்து செய்து அவரை விடுதலை செய்தார். அந்த வகையில் ஐரீன் பெர்னாண்டஸின் பதின்மூன்று ஆண்டுகால நீதிமன்ற வழக்கு ஒரு முடிவுக்கு வந்தது.[7][8]

2014 மார்ச் மாதம் 31-ஆம் தேதி இதயச் செயல் இழப்பால், தம்முடைய 68-ஆவது வயதில், செர்டாங் மருத்துவமனையில் காலமானார்.[9][10]

பெண்களின் வன்முறைகளுக்கு எதிராகப் போராடியவர் தொகு

அன்னாரின் மறைவு ஒரு பேரிழப்பாகும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராகப் போராடியவர். புலம்பெயர் ஏழைத் தொழிலாளர்கள் துஷ்பிரயோகம் செய்யப் படுவதை நிறுத்துவதற்காகப் போராடியவர்.

ஐரீனுக்கு மூன்று பிள்ளைகள். தவிர பல வளர்ப்பு குழந்தைகள் உள்ளனர். அவர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். இருப்பினும் 1970-இல் தன் ஆசிரியர் பணியைத் துற்ந்து, சமூகச் சேவைகளில் முழுமையாக ஈடுபட்டார்.

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள் தொகு

  1. The Rocket - DAP Newsletter
  2. "Our Founder:Irene Fernandez". TENAGANITA. பார்க்கப்பட்ட நாள் 31 March 2014.
  3. "In loving memory of Irene Fernandez - The Malaysian Bar - In 1995, Irene Fernandez published a report on the living conditions of the migrant workers entitled "Abuse, Torture and Dehumanised Conditions of Migrant Workers in Detention Centres". www.malaysianbar.org.my. பார்க்கப்பட்ட நாள் 9 March 2022.
  4. "ICIJ Journalists: Steven Gan". International Consortium of Investigative Journalists. Archived from the original on 4 April 2010. பார்க்கப்பட்ட நாள் 29 January 2012.
  5. Steven Gan (Summer 2002). "Virtual Democracy in Malaysia". Nieman Reports. பார்க்கப்பட்ட நாள் 29 January 2012.
  6. 6.0 6.1 "IPF Awards 2000 - Announcement". Committee to Protect Journalists. 2000. பார்க்கப்பட்ட நாள் 29 January 2012.
  7. "Irene Fernandez Freed". Sin Chew. http://www.mysinchew.com/node/18566. பார்த்த நாள்: 2008-08-24. 
  8. "Ms. Irene Fernandez finally acquitted!". International Federation for Human Rights. 25 November 2008. பார்க்கப்பட்ட நாள் 30 January 2012.
  9. "Activist Irene Fernandez dies". The Star (Malaysia). http://www.thestar.com.my/News/Nation/2014/03/31/Activist-Irene-Fernandez-dies/. பார்த்த நாள்: 2014-03-31. 
  10. Rashvinjeet S. Bedi; L. Suganya (31 March 2014). "Malaysians pay tribute to Irene Fernandez". The Star (Malaysia). https://www.thestar.com.my/news/nation/2014/03/31/malaysians-pay-tribute-to-irene-fernandez/. பார்த்த நாள்: 31 March 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐரீன்_பெர்னாண்டஸ்&oldid=3947384" இலிருந்து மீள்விக்கப்பட்டது