ஐரோப்பிய மொழிகளில் வழங்கும் தமிழ்ச் சொற்கள்

பண்டைய மற்றும் தற்கால ஐரோப்பிய மொழிகளில் தமிழ்ச் சொற்களை மூலங்களாகக் கொண்ட சொற்கள் பல காணப்படுகின்றன. மேற்படி மொழிகளுக்கான அகராதிகள் அவ்வாறான சில சொற்களுக்கான மூலங்களாகத் தமிழ் மொழியைக் குறிப்பிடுகின்றன. அவ்வாறான மேலும் பல சொற்கள் காணப்படுவதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

இவ்வாறு ஐரோப்பிய மொழிகளில் தமிழ்ச் சொற்களின் கலப்பு பல்வேறு காலகட்டங்களிலும், பல காரணங்களால் நிகழ்ந்துள்ளன. கிறிஸ்து சகாப்தத்துக்கு முன்னரே தமிழகத்துக்கும், ஐரோப்பிய நாகரீகங்களுக்கும் இடையேயான வணிகத் தொடர்புகள் காரணமாக சில வணிகப் பொருட்களின் பெயர்கள் தமிழிலிருந்து ஐரோப்பிய மொழிகளுள் புகுந்துள்ளன. விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் இவ்வாறான தமிழ்ச் சொற்கள் சில எடுத்துக்காட்டப் பட்டுள்ளன. ஆங்கில மொழியிலும் அதனையொத்த ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும் உள்ள ரைஸ் (Rice) என்னும் சொல் அரிசி என்னும் தமிழ்ச் சொல்லை[சான்று தேவை] மூலமாகக் கொண்டதாகச் சில ஆய்வாளர்கள்[யார்?] கூறுகின்றனர். இது இலத்தீன், கிரேக்கம் போன்ற பண்டைய மொழிகளின் வழியாக நவீன மொழிகளுக்கு வந்து சேர்ந்தது என்பது அவர்கள் கருத்து.

அண்மைக் காலங்களிலும் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் ஐரோப்பியர் ஆட்சி நடைபெற்ற போது சில தமிழ்ச் சொற்கள் ஐரோப்பிய மொழிகளுக்குச் சென்றுள்ளன. ஆங்கில மொழி அகராதிகளில் காணப்படும், mammoty (மமொட்டி - தமிழ் மண்வெட்டி இலிருந்து), cooly (கூலி - தமிழ் கூலி இலிருந்து) போன்ற சொற்கள் இத்தகையவை. தமிழ்ச் சொல்லான கட்டுமரம் ஜெர்மன் மற்றும் ஆங்கில மொழிகளில் கடமரன் (Katamaran) என வழங்கப்படுவதும் இன்னொரு எடுத்துக்காட்டு.

பிற மொழிகளில் வழங்கும் தமிழ்ச் சொற்களின் பட்டியல் தொகு

தமிழ்ச் சொல் பிறமொழிச் சொல் மொழி வழி
கட்டுமரம் katamaran ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
கஞ்சி Congee ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
மண்வெட்டி Mamotty ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
மாங்காய் mango ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்
அரிசி rice ஆங்கிலம் தமிழ் --> ஆங்கிலம்}