ஐவி மைக் (அணுகுண்டு சோதனை)
ஐவி மைக் (Ivy Mike) என்பது முதலாவதாக சோதனை செய்யப்பட்ட ஐதரசன் குண்டு அல்லது வெப்ப அணுக்கரு குண்டுக்கு இடப்பட்ட பெயர் ஆகும்.
அணுக்கரு இணைவுs சக்தி மூலம் வெடிப்பை ஏற்படுத்தும் இச்சோதனையை அமெரிக்க ஐக்கிய நாடு நவம்பர் 1, 1952 ஆம் ஆண்டு மார்சல் தீவுகளில் மேற்கொண்டது. தங்கள் வெடிப்புத் திறனின் பெரும்பான்மையான ஆற்றலை அணுக்கரு இணைவு ஐதரசனிலிருந்து பெறும் ஐதரசன் குண்டுகள் டெல்லர்-உலாம் வடிவமைப்பு மூலம் இயங்குகின்றது.
இதன் பௌதீக அமைப்பு மற்றும் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் வகையான தாழ்ந்த வெப்பநிலையிலான டியுட்டோரியம் (cryogenic liquid deuterium)காரணமாகவும் மைக் உபகரணம் வெப்ப அணுக்கரு குண்டு பாவனைக்கு பொருத்தமற்றிருந்தது. இதனால் உயர் எடை கொண்ட வெடிபொருளினாலான மிகப் பழமையான பரிசோதனையாக இது மட்டுமே இது கொள்ளப்படுகின்றது. இதற்கு மாற்றாக இலகுபடுத்தப்பட்ட பாரமற்ற தயாரிப்பான ஈசீ-16 (en:EC-16) எனும் தாழ்ந்த வெப்பநிலைக்குரியதல்லாத கருவி தயாரிக்கப்பட்டு காசில் பிறேவோ எனுமிடத்தில் பரிசோதிக்கப்பட்டது. இது செயலாற்றாமையால் இச்சோதனை நீக்கப்பட்டு தாழ்ந்த வெப்பநிலைக்குரிய பிறேவோ உபகரணம் முழுமைப்படுத்தப்பட்டது.