ஐ.நா. உருசிய மொழி நாள்

ஐநா உருசிய மொழி நாள் (UN Russian Language Day, உருசியம்: День русского языка Организации Объединенных Наций) என்பது ஆண்டுதோறும் சூன் 6 அன்று கொண்டாடப்படும் ஒரு நிகழ்வு ஆகும்.[1] இந்நிகழ்வு 2010 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தினால் (யுனெசுக்கோ) அறிமுகப்படுத்தப்பட்டது. நவீன உருசிய மொழியின் தந்தை என அழைக்கப்படும் உருசியக் கவிஞர் அலெக்சாந்தர் பூசுக்கினின் பிறந்தநாளை நினைவு கூரும் முகமாக ஐநா உருசிய மொழி நாள் அறிவிக்கப்பட்டது.[1]

ஐக்கிய நாடுகள் உருசிய மொழி நாள்
நாள்சூன் 6
நிகழ்வுஆண்டுதோறும்
தொடர்புடையனபன்னாட்டுத் தாய்மொழி நாள்,
ஐ.நா. ஆங்கில மொழி நாள்

ஐநா மொழி நாட்களின் முன்முயற்சி 2010 பிப்ரவரியில், பன்மொழி மற்றும் கலாச்சாரப் பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதற்கும், ஐ.நா.வின் ஆறு அதிகாரபூர்வ பணி மொழிகளும் அவ்வமைப்பு சமமாகப் பயன்படுத்தப்படுவதை ஊக்குவிப்பதற்கும் தொடங்கப்பட்டது.[2]

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Wagner, Ashley (2013-06-06). "Celebrating Russian Language Day". Oxford Dictionaries இம் மூலத்தில் இருந்து 2013-12-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131230233304/http://blog.oxforddictionaries.com/2013/06/russian-language-day/. பார்த்த நாள்: 30 December 2013. 
  2. Shasha, Deng (2010-11-23). "First-ever Chinese Language Day celebrated at UN". Xinghua. http://news.xinhuanet.com/english2010/photo/2010-11/13/c_13604437_2.htm. பார்த்த நாள்: 30 December 2013. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ.நா._உருசிய_மொழி_நாள்&oldid=3512879" இலிருந்து மீள்விக்கப்பட்டது