பன்மொழிப் புலமை
பன்மொழிப் புலமை (அ) பன்மொழியாமை (multilingualism) என்பது பல பல மொழிகளைப் ஒருவரோ அல்லது ஒரு சமூகமோ பயன்படுத்துவது மற்றும் பன்மொழிப்பயன்பாடை ஊக்குவிப்பதுமாகும். உலகமெங்கும் வாழும் மனிதர்களில் பலமொழிகளில் பேசக்கூடியவர்கள் ஒரேயொரு மொழியைப் பேசுபவர்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளார்கள்[1]. உலகமயமாக்கல், பண்பாட்டு வெளிப்படைத்தன்மை போன்ற காரணிகளால் பன்மொழிப் புலமையானது ஒரு சமூக தேவையாக, நிகழ்வாக உள்ளது[2]. இணையதளம் மூலமாக மிக எளிதாகச் செய்திகளைப் பெற்றுக்கொள்ள முடிவதும், ஒருவர் பல மொழி பேசுபவர்களுடனானத் தொடர்புகள் கொள்வது அதிகமாக நிகழ்வதாலும் பல மொழிகளைத் தெரிந்து கொள்வது எளிதில் ஏதுவாகிறது. பல மொழிகளைப் பேசுபவர்கள் பன்மொழியாளர்கள் என்றழைக்கப்படுகிறார்கள்[3].


மேற்கோள்கள் தொகு
- ↑ "A Global Perspective on Bilingualism and Bilingual Education (1999), G. Richard Tucker, Carnegie Mellon University". http://www.cal.org/resources/Digest/digestglobal.html.
- ↑ "The importance of multilingualism". multilingualism.org. http://multilingualism.org/multilingualism/the-importance-of-multilingualism. பார்த்த நாள்: 2010-09-16.
- ↑ "Polyglot - definition of polyglot by the Free Online Dictionary, Thesaurus and Encyclopedia". Thefreedictionary.com. http://www.thefreedictionary.com/polyglot. பார்த்த நாள்: 2010-07-10.