ஐ. என். எசு வேலா (எசு 40)
ஐ. என். எசு வேலா (எசு 40) (INS Vela -S40) என்பது இந்தியக் கடற்படையின் நான்கு டீசல்-மின்சார வேலா-வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்களின் முன்னணி கப்பலாகும். லாட்வியன் எஸ்.எஸ்.ஆரின் ரீகாவில் ஆகஸ்ட் 31, 1973 அன்று நீர்மூழ்கிக் கப்பல் இயக்கப்பட்டது. தனது சக கப்பலான வாக்லியுடன் சேர்ந்து, இந்துஸ்தான் ஷிப்யார் லிமிடெடில் நீடித்த புதுப்பிப்புக்குப் பின் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் பணியிலிருந்தது.[1] 37 வருடச் சேவைக்குப் பின்னர், இந்த நீர்மூழ்கிக் கப்பல் 25 ஜூன் 2010 அன்று சேவையிலிருந்து நிறுத்தப்பட்டது. நீர்மூழ்கிக் கப்பல் கிழக்கு கடற்படை கட்டளையால் நீக்கப்பட்ட நேரத்தில் உலகின் மிகப் பழமையான செயல்பாட்டு நீர்மூழ்கிக் கப்பல் என்று கூறப்பட்டது.[2][3][4][5] ஐ.என்.எஸ் வேலா தமிழக அரசால் உருவாக்கப்படும் கடல் பாரம்பரிய திட்டமான சமுத்திரத்தின் ஒரு பகுதியாக மாமல்லபுரத்திற்கு அருகே கடற்கரையில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த கப்பல் ஒரு நீர்மூழ்கிக் கப்பலின் ஒவ்வொரு பகுதியையும் காட்டும் கண்கவர் காட்சியாக இருக்கும்.[6]
கப்பல் (இந்தியா) | |
---|---|
பெயர்: |
ஐ. என். எசு வேலா (எசு 40) INS Vela |
வெளியீடு: | 28 ஜனவரி 1972 |
பணியமர்த்தம்: | 31 ஆகஸ்ட்1973 |
பணி நிறுத்தம்: | 25 ஜூன் 2010 |
பொது இயல்புகள் | |
வகுப்பும் வகையும்: | வேலா-வகை நீர்மூழ்கி |
பெயர்வு: |
|
நீளம்: | 91.3 m (299 அடி 6 அங்) |
வளை: | 7.5 m (24 அடி 7 அங்) |
Draught: | 6 m (19 அடி 8 அங்) |
விரைவு: |
|
வரம்பு: |
|
சோதனை ஆழம்: | 250 m (820 அடி) |
பணிக்குழு: | 75 (8 அலுவலர்கள்) |
போர்க்கருவிகள்: |
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "Navy's sub induction plan suffers blow". http://indiatoday.intoday.in/story/Navys+sub+induction+plan+suffers+blow/1/20342.html.
- ↑ "Archived copy". Archived from the original on 19 June 2009. பார்க்கப்பட்ட நாள் 6 August 2009.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Archived copy". Archived from the original on 28 June 2010. பார்க்கப்பட்ட நாள் 5 July 2010.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "INS Vela decommissioned". http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/INS-Vela-decommissioned/article16268935.ece.
- ↑ "Submarine to be decommissioned". http://www.thehindu.com/news/cities/Visakhapatnam/Submarine-to-be-decommissioned/article16265637.ece.
- ↑ http://www.indiamapped.com/museums-in-india/tamil-nadu-ins-vela/