ஐ. எப். இ. டி. பொறியியல் கல்லூரி
ஐ. எப். இ. டி. பொறியியல் கல்லூரி (IFET Engineering College) ஆனது, இந்திய மாநிலமான தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட கெங்கராம்பாளையம் என்னும் ஊரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும்.[1]
ஐ. எப். இ. டி. பொறியியல் கல்லூரி | |
---|---|
அமைவிடம் | |
கெங்கராம்பாளையம், விழுப்புரம், தமிழ்நாடு இந்தியா | |
தகவல் | |
வகை | கல்வி நிறுவனம் |
தொடக்கம் | 1998 |
பகுதி பொறுப்பாளர் | இந்தோ பிரான்சு கல்வி அறக்கட்டளை |
Chairman | பைரோஸ் கான் |
இணையம் | http://www.ifet.ac.in |
வரலாறு
தொகுஇக்கல்லூரி 1998 ஆம் ஆண்டு இந்தோ பிரான்சு கல்வி அறக்கட்டளையால் நிறுவப்பட்டது. இதன் சுருக்கமே ஐ. எப். இ. டி என இக்கல்லூரிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது அண்ணா பல்கலைக்கழகத்தின் சிறந்த கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.[சான்று தேவை]
நிறுவனம்
தொகுஇக்கல்லூரியானது அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. மேலும் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரக் கவுன்சிலால் (NAAC) தர அங்கீகாரம் பெற்றது. இக்கல்லூரி ஐஎஸ்ஓ 9001: 2008 சான்றிதழ் பெற்றது. மேலும் இது ஏ.ஐ.சி.டி.இ., என்.பி.ஏ, புது தில்லியின் அங்கீகாரம் கொண்ட கல்லூரி ஆகும்.
இருப்பிடம்
தொகுஇது புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை 45எ இல் அமைந்துள்ளது. இது புதுச்சேரி மாநிலத்தின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கல்லூரியில் இருந்து புதுச்சேரி 25 கி.மீ தொலைவிலும், விழுப்புரம் 15 கி.மீ தொலைவிலும் உள்ளது. மற்றும் 5 கி.மீ தொலைவில் வளவனூர் தொடருந்து நிலையம் உள்ளது.
தேர்வு முறை
தொகுஒவ்வொரு கல்வி ஆண்டும் இரண்டு பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பருவங்களிலும் அனைத்து கோட்பாடு பாடங்களில் மூன்று உள் தேர்வுகளும், மற்றும் ஒரு இறுதித் தேர்வும் இருக்கும். ஆய்வகத் தேர்வுகள் இறுதித் தேர்வை தொடர்ந்து உள் தேர்வாக வைக்கப்படுகிறது. அனைத்துத் தேர்வுகளும் இந்தியாவின் பிற பொறியியல் கல்லூரிகள் போன்றே எழுத்துத் தேர்வுகள் மற்றும் செய்முறைத் தேர்வுகள் முறை வழக்கத்தில் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "ஐஎப்இடி பொறியியல் கல்லூரி கட்டடவியல் மாணவிகள் சாதனை". தினமணி (சூன் 06, 2018)