ஐ. எஸ். இன்பதுரை

ஐ. எஸ். இன்பதுரை (I.S.Inbadurai)(பிறப்பு 28 செப்டம்பர் 1965) என்பவர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் வட்டம் நவ்வலடியினைச் சார்ந்தவர். வழக்கறிஞரான இன்பதுரை, 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இராதாபுரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ._எஸ்._இன்பதுரை&oldid=3445409" இலிருந்து மீள்விக்கப்பட்டது