ஒகசவரா தீவுகள்

(ஒகசவரா தீவுக்கூட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பொனின் தீவுகள் (Bonin Islands) அல்லது ஒகசவரா தீவுகள் (Ogasawara Islands, 小笠原諸島), என்பது சப்பானில் உள்ள ஒரு தீவுக்கூட்டம் ஆகும். இத்தீவுக்கூட்டத்தில் 30 தீவுகள் அகழாய்வு முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக உள்ளன. இவை அயன அயல் மண்டலம், வெப்ப வலயம் பகுதிகளின் கீழ் வரும் தீவுகள் ஆகும். தோக்கியோ (SSE) பகுதியைச் சுற்றி 1,000 கிலோமீட்டர்கள் (620 மைல்) சுற்றளவிலும், குவாமில் இருந்து 1,600 கிலோமீட்டர்கள் (1,000 மைல்) சுற்றளவிலும் அமைந்துள்ளன.[1][2] இத்தீவுக்கூட்டத்தின் மொத்த பரப்பளவு 84 சதுர கிலோமீட்டர்கள் (32 சதுரமைல்) ஆகும். இருப்பினும், இரு தீவுகளில் (சிச்சிசீமா, அகசீமா) மட்டுமே மக்கள் வாழ்கின்றனர். 2021 கணக்கின்படி, மொத்த மக்கள் தொகை 2,560 ஆகும்.

ஒகசவரா தீவுகள்
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
போனின் தீவுகள் (ஒகசவரா தீவுகள்) மூன்று முக்கிய தீவுக் குழுக்களை உள்ளடக்கியது - சிச்சிசிமா, அகாசிமா, முக்கோசிமா - தோக்கியோவின் தென்மேற்கில் அமைந்துள்ளது. நிர்வாக ரீதியாக, இவை அருகிலுள்ள எரிமலைத் தீவுகளையும் உள்ளடக்கியது (ஐவோ சிமா உட்பட).
அலுவல்முறைப் பெயர்ஒகசவாரா தீவுகள்
Ogasawara Islands
அமைவிடம்யப்பான்
உள்ளடக்கம்தீவுகள், பவளப் படிப்பாறைகள், கடல் பகுதிகள்
கட்டளை விதிஇயற்கைக் களம்: (ix)
உசாத்துணை1362
பதிவு2011 (35-ஆம் அமர்வு)
பரப்பளவு7,939 ha (30.65 sq mi)
ஆள்கூறுகள்27°43′6″N 142°5′59″E / 27.71833°N 142.09972°E / 27.71833; 142.09972
ஒகசவரா தீவுகள் is located in ஓசியானியா
ஒகசவரா தீவுகள்
ஓசியானியாவில் பொனின் தீவுகளின் அமைவிடம்

காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Yoshida, Reiji (2018-07-12). "Ogasawara Islands: Remote witnesses on the front lines of Japanese history". The Japan Times Online. https://www.japantimes.co.jp/news/2018/07/12/national/history/ogasawara-islands-remote-witnesses-front-lines-japanese-history/. 
  2. Coppock, Mike (21 January 2021). "American Outpost at Japan's Front Door". American History. Arlington, Virginia: HistoryNet LLC.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒகசவரா_தீவுகள்&oldid=3901293" இலிருந்து மீள்விக்கப்பட்டது