இறைவாக்கினர் ஓசேயா (/ˌhˈzə/ or /hˈzə/; கிரேக்கம் Ὠσηέ = Ōsēé) என்பவர் கி.மு. 8ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆவார். கிறித்தவ மற்றும் யூத புனித நூலான பழைய ஏற்பாட்டில் வரும் ஒசேயா நூலின் ஆசிரியர் இவர் என நம்பப்படுகின்றது. இவர் 12 சிறு இறைவாக்கினர்களுள் ஒருவராகப் பட்டியலிடப்படுகின்றார். இந்த நூலின் படி இவரின் தந்தை பெயேரி ஆவார்.[1] சுமார் 60 ஆண்டுகள் இவர் இறைவாக்குரைத்தார். இவர் ஒருவரே இசுரேலிய இறைவாக்கினர்களுல் தனது வாக்குகளை நூல்வடிவில் விட்டுச்சென்றவர் ஆவார்.[2]

ஒசேயா
Russian icon of the prophet Hosea
18ம் நூற்றாண்டின் உருசிய திருவோவியம்
இறைவாக்கினர்
ஏற்கும் சபை/சமயங்கள்யூதம்
கிறித்தவம்
இசுலாம்
முக்கிய திருத்தலங்கள்Safed, இசுரேல்
திருவிழாஅக்டோபர் 17 (மரபுவழி சபைகள்)
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஒசேயா (நூல்)

பெயர் தொகு

ஒசேயா என்னும் என்னும் பெயருக்கு "கடவுளே மீட்பர்" என்பது பொருள். கிரேக்க மொழிபெயர்ப்பில் இந்நூலின் பெயர் Ὠσηέ (Ōsēe) என்று வரும்.

வரலாற்று சுறுக்கம் தொகு

வடநாடான இஸ்ரயேலில் ஆமோசுக்குச் சற்றுப் பின்னர் வாழ்ந்தவர் இவர்; சமாரியா வீழ்ச்சியுற்ற கி.மு. 722-க்கு முன் இறைவாக்கு உரைத்தவர்; இஸ்ரயேலரின் சிலை வழிபாட்டைக் கடிந்து கொண்டவர்; அவர்களது கீழ்ப்படியாமையைக் கண்டித்தவர். இவர் கோமேர் என்ற பெண்ணை மணந்து கொண்டார். அவள் அவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து, அவரை விட்டு விலகிச் சென்றாள். அத்தகையவளோடு அவர் கொண்டிருந்த மண உறவைப் பின்னணியாகக் கொண்டு ஓசேயா இறைமக்களின் உண்மையற்ற தன்மையை, கீழ்ப்படியாமையை, நம்பிக்கைத் துரோகத்தை எடுத்தியம்பினார். கடவுளை விட்டு விலகிச் சென்ற அவர்களுக்கு இறைவன் தண்டனை வழங்குவார்; ஆயினும் இறைவனின் பேரன்பு இறுதி வரை நிலைத்திருக்கும்; அம்மக்களை அவர் பக்கம் ஈர்த்துக் கொள்ளும்; அதன் மூலம், முறிந்த உறவு மலரும். இதுவே இவரது நூலின் செய்தியாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. ஒசேயா 1:1
  2. "www.Bibler.org – Dictionary – Hosea". 2012-05-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒசேயா&oldid=2030732" இலிருந்து மீள்விக்கப்பட்டது