ஒட்டக அருங்காட்சியகம்

ஒட்டக அருங்காட்சியகம் (Camel Museum) என்பது ஒட்டக இனங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஓர் அருங்காட்சியகமாகும். இது ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாயில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் அரபு உலகின் முக்கியமான மற்றும் பாரம்பரிய வரலாற்றைக் காட்டுகிறது. துபாயில் அதிகம் பார்வையிடப்பட்ட இடங்களில் ஒன்றாக இது உள்ளது. பல்வேறு வகையான ஒட்டகங்கள் துபாயில் உள்ள ஒட்டக அருங்காட்சியகத்தில் அவற்றின் வம்சாவளி மற்றும் வரலாற்றின் படி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் ஒட்டக வரலாறு, இனங்கள், உடற்கூறியல், உள்ளிட்ட ஒட்டகங்களுடன் தொடர்புடைய பலவற்றைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். அருங்காட்சியகத்திற்கு இலவச அணுகலைப் பெற, துபாய் நகர அனுமதிச் சீட்டு வைத்திருப்பது அவசியம்.[1][2][3]

ஒட்டக அருங்காட்சியகம்
முன்னாள் பெயர்
ஒட்டக-சவாரி இல்லம்
நிறுவப்பட்டது1940
அமைவிடம்துபாய், ஐக்கிய அரபு அமீரகம்
வகைவரலாற்று அருங்காட்சியகம்

வரலாறு

தொகு

ஒட்டக அருங்காட்சியகம் 1940ஆம் ஆண்டில் அல் சிந்தகா சுற்றுப்புறத்தில் கட்டப்பட்டது. இது முன்பு "ஒட்டக-சவாரி இல்லம்" என்றும் "பீட் அல் ரெகாப்" என்றும் அழைக்கப்பட்டது. ஒட்டகச் சவாரி செய்யும் மாளிகை மறைந்த பட்டத்து இளவரசர் சேக் ரசீத் பின் சயீத் அல் மக்தூமின் சொத்தாக அறியப்படுகிறது. மேலும் இது இவரது இல்லத்திற்கு அருகில் கட்டப்பட்டது.[1][2][3] கிழக்கு மற்றும் மேற்கத்திய பாணிகளைப் பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்ட இந்த வீடு, 664 சதுர மீட்டர் அளவில் 4.7 மீட்டர் உயரத்துடன் ஒற்றை மாடி கட்டமைப்பைக் கொண்டுள்ளது. பின்னர், இக் கட்டடம் அருங்காட்சியகமாக மாற்றப் பல புதிய அறைகள் மற்றும் வசதிகளை உள்ளடக்கியதாக வீடு விரிவுபடுத்தப்பட்டது. இந்த அருங்காட்சியகம் ஒட்டகங்களின் வரலாறு, ஒட்டக மேலாண்மையில் பயன்படுத்திய கருவிகள், ஒட்டகம் தொடர்பான தகவல்களை, கொண்ட பல பிரிவுகள் மற்றும் அரங்குகளால் ஆனது. இதில் ஒட்டக இனங்கள், உடற்கூறியல், சிகிச்சை மற்றும் பராமரிப்பு முறைகள், அத்துடன் அவற்றின் இறைச்சி, பால் மற்றும் கம்பளி ஆகியவற்றின் நன்மைகள் பற்றிய தகவல்களையும் கொண்டுள்ளது.[4]

முக்கியத்துவம்

தொகு

தற்போதைய ஒட்டக அருங்காட்சியகம், அருங்காட்சியகமாக மாற்றுவதற்கு முன்பு, ஒட்டகங்கள் மற்றும் குதிரைகளைப் பராமரிப்பதற்கும், பயிற்சி அளிப்பதற்கும் பயன்படுத்தப்பட்ட ஓர் இடமாகப் பயன்படுத்தப்பட்டது. அருங்காட்சியகமாக மாறிய பிறகு, அரபு உலகில் ஒட்டகத்தின் பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி பார்வையாளர்கள் அறிந்து கொள்வதற்கான இடமாக மாற்றப்பட்டது. அரபு கலாச்சாரம் தொடர்பான ஒட்டக இலக்கியத்தின் வரலாறு, அரபு மற்றும் முஸ்லீம் உலகில் ஒட்டகங்களின் முக்கியத்துவத்தையும் இது விளக்குகிறது. பார்வையாளர்கள் பார்வையிடும்போது அருங்காட்சியகம் மற்றும் பாலைவனங்களின் மெய்நிகர் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளும் வகையில் நிறுவப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Camel Museum | History Of The Camels in Dubai" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-10.
  2. 2.0 2.1 "Camel Museum Dubai". Dubai Travel Guide and City Information (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-01-04. பார்க்கப்பட்ட நாள் 2023-04-10.
  3. 3.0 3.1 Team (2022-09-12). "Camel Museum Dubai". City Tour in Dubai (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-10.
  4. "Camel Museum Dubai: Everything You Need to Know Before Visiting". www.forevertourism.com. பார்க்கப்பட்ட நாள் 2023-04-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒட்டக_அருங்காட்சியகம்&oldid=4171574" இலிருந்து மீள்விக்கப்பட்டது