ஒட்டாவா ஆறு
ஒட்டாவா ஆறு கனடாவின் ஒன்ராறியோ, கியூபெக் மாகாணங்களில் ஓடுகின்ற ஓர் ஆறு ஆகும். இது பெரும்பாலும் இவ்விரு மாகாணங்களின் எல்லையாக இவற்றின் நடுவே ஓடுகின்றது. இந்த ஆற்றின் பெயரே ஒட்டாவா நகருக்கு சூட்டப்பட்டுள்ளது.
ஒட்டாவா ஆறு (Kichisìpi) | |
Rivière des Outaouais | |
River | |
நாடு | கனடா |
---|---|
மாகாணங்கள் | கியூபெக், ஒன்றாரியோ |
உற்பத்தியாகும் இடம் | கேப்பிமிட்சிகாமா ஏரி |
- அமைவிடம் | மொசெல் ஏரி, கியூபெக், லா வால்-டெ-லா-கெட்டினாவ், உட்டாவெ, கியூபெக் |
- ஆள்கூறு | 47°36′N 75°48′W / 47.600°N 75.800°W |
கழிமுகம் | செயின்ட். லாரன்சு ஆறு |
- அமைவிடம் | மொண்ட்ரியால், கியூபெக் |
- ஆள்கூறு | 45°27′N 74°05′W / 45.450°N 74.083°W |
நீளம் | 1,271 கிமீ (790 மைல்) |
வடிநிலம் | 1,46,300 கிமீ² (56,487 ச.மைல்) |
Discharge | for காரில்லொன் அணை |
- சராசரி | |
- மிகக் கூடிய | |
- மிகக் குறைந்த | |
ஒட்டாவா ஆற்றின் நிலப்படம்
|
புவியியல்
தொகுஒட்டாவா ஆறு கியூபெக்கின் கேப்பிமிட்சிகாமா ஏரியில் துவங்குகிறது. இங்கிருந்து மேற்காகப் பாய்ந்து திமிசுகாமிங் ஏரியில் விழுகிறது. இங்கிருந்து கியூபெக், ஒன்றாரியோ மாகாணங்களின் எல்லையில் தென்கிழக்காக ஓடுகிறது. ஒட்டாவா மற்றும் கெட்டினாவ் அருகே சூதியேர் அருவியாக வீழ்கிறது. இங்கு ரிடொ ஆறும் கெட்டினாவ் ஆறும் ஒட்டாவா ஆற்றுடன் இணைகின்றன. மொண்ட்ரியாலில் இரு மலைகள் ஏரியிலும் செயின்ட் இலாரன்சு ஆற்றுடனும் கலக்கிறது. இதன் மொத்த நீளம் 1,271 கிமீ ஆகும்.